ஆரி எனக்கு கணவராகி.. குழந்தையெல்லாம் பொறந்து.. இங்கே பேரெல்லாம் வச்சோம்.. அர்ச்சனாவின் கதை எதுக்கோ?

சென்னை: இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் அன்சீன் புரமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

நிஷாவுக்கும் அர்ச்சனாவுக்கும் நடந்த குழாய் அடி சண்டையை பற்றி பேசும் அர்ச்சனா ஆரி பற்றியும் பேசியுள்ளார்.

அன்சீனில் கூட சனம் ஷெட்டி பேசுவதை போடாமல், மீண்டும் அர்ச்சனாவையே காட்டி கடுப்பேத்துறீங்களே என பிக் பாஸ் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

மறக்க முடியாத தருணங்கள்

மறக்க முடியாத தருணங்கள்

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களில் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு அர்ச்சனா, நிஷா, ஜித்தன் ரமேஷ், ரேகா, சம்யுக்தா, சனம் ஷெட்டி மற்றும் சுசித்ரா உள்ளிட்டோர் வந்துள்ளனர். மறக்க முடியாத தருணங்களை ஒவ்வொருத்தரும் கூறப் போகும் மொக்கை எபிசோடு தான் இன்று இருக்கும் என புரமோக்களை பார்த்தே நெட்டிசன்கள் கணித்துள்ளனர்.

அப்பாவை பார்த்துக்க முடியல

அப்பாவை பார்த்துக்க முடியல

சினிமாவில் ஹீரோயினான பின்னர், அம்மாவுடனே அதிக நேரத்தை செலவழித்ததாகவும், அப்பாவை கண்டுக் கொள்ள முடியாமல் விட்டதால், ஒரு கட்டத்தில் அவர் உயிரே பிரிய நேரிட்டது. அதை இந்த வீட்டில் பதிவு செய்யாமல் விட்டுவிட்டேன் என ரேகா கண்ணீர் சிந்தி அழும் காட்சிகள் மூன்றாவது புரமோவில் இடம்பெற்று இருந்தன.

குழாயடி சண்டை

குழாயடி சண்டை

இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள அன்சீன் புரமோவில் அர்ச்சனா தனக்கு பிடித்த காட்சியை விவரிக்கும் சீன்கள் இடம்பெற்றுள்ளன. நிஷாவுடன் சேர்ந்து குழாயடி சண்டை போடும் காட்சியைத் தான் அர்ச்சனா விவரித்தார். அதை ஆரம்பத்தில் பார்த்த ரம்யா பாண்டியன் எல்லாம் பிடிக்காத மாதிரி ரியாக்ட் செய்தார் என்றார்.

கணவர் ஆரி

கணவர் ஆரி

அந்த நாடகத்தில் எஸ்.ஐ. ஆக வந்த ஆரி அண்ணன் எனக்கு கணவராகி, எங்களுக்கு குழந்தையெல்லாம் பிறந்து இங்கே பேரெல்லாம் வச்சோம் மொத்த குடும்ப விளையாட்டையும் அரை மணி நேரத்துல டோட்டல் டேமேஜ் செய்த ரியோவுக்கு என் நன்றி என தனது கதையை முடிக்கிறார் அர்ச்சனா.

ஏன் அன்சீன் புரமோ

ஏன் அன்சீன் புரமோ

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது புரமோன்னு சொல்லியே போடலாமே, ஏன் அன்சீன் புரமோன்னு போடுறீங்க, எப்படியோ அர்ச்சனா பேசுறதையும், அன்பு கேங்கின் அட்டகாசங்களையும் தான் ஷோ ஃபுல்லா ஹைலைட் பண்ணி ரியோவுக்கும் சோமுக்கும் மைலேஜ் ஏத்த போறீங்கன்னு நெட்டிசன்கள் கடுப்பாகி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X