ப்ரீத்திக்கு பிக் பாஸ் வீடு கியாரண்டி.. இன்னொரு விளம்பரம்.. இப்படியே போனா இரிடேட் ஆகிடுவாங்க!
சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்க நெருங்க பிக் பாஸ் வீடு, விளம்பர வீடாக டோட்டலாகவே மாறி விட்டது.
பிரிஸ்மா, டிரெண்ட்ஸ், ஆர்.கே.ஜி நெய் விளம்பரங்களை தொடர்ந்து, நேற்று ப்ரீத்தி மிக்ஸி விளம்பர டாஸ்க்கும் பிக் பாஸ் வீட்டில் அரங்கேறியது.
எப்போதுமே அர்ச்சனா எப்படித் தான் அவ்வளவு எனர்ஜியுடன் இருக்காங்கன்னு தெரியவே இல்லை.

டார்ச்சர் பண்ணும் விளம்பர டாஸ்க்குகள்
பஸர் அடித்த உடனே, விளம்பர பொருட்களை வைத்து, பிக் பாஸ் வீட்டு அணியினர் சில குழுக்களாக பிரிந்து அந்த விளம்பர பொருளை விளம்பரப்படுத்த ரொம்பவே போராடி வருகின்றனர். இதனால், பிக் பாஸ் நிகழ்ச்சி பார்க்கும் ரசிகர்கள் உள்ளேயும், வெளியேயும் விளம்பரம் போட்டா எப்படி டா என டென்ஷன் ஆகி வருகின்றனர்.

ஃபன் இல்லை
விளம்பர நிகழ்ச்சியாக இருந்தாலும், அதனை ஒரு நல்ல டஃப் போட்டியாகவும், ஃபன் டாஸ்க்காகவும் கொடுக்க பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்துபவர்கள் கொடுக்க தவறுகின்றனர் என்கிற குற்றச்சாட்டுகளும் முன் வைக்கப்பட்டு வருகின்றன. ஏதோ கடமைக்காக கத்தி கூச்சல் போட்டு, வெறும் அந்த பொருளை விளம்பரம் படுத்தும் நோக்கிலேயே போட்டியாளர்கள் செயல்படுவது ரொம்பவே போர் அடிக்கிறது.

ப்ரீத்தி ஸோடியாக்
ஆர்.கே.ஜி நெய் விளம்பரத்தை தொடர்ந்து நேற்று ப்ரீத்தி மிக்ஸி ஸோடியாக் விளம்பரம் பிக் பாஸ் வீட்டில் அரங்கேறியது. ரம்யா பாண்டியன், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் அர்ச்சனா ஆகியோர் தலைமையில் மூன்று அணிகளாக பிரிந்து ப்ரூட் சாலட், மாவு பிசைதல் மற்றும் காய் நறுக்குதல் உள்ளிட்ட டாஸ்க்குகளை செய்தனர்.

எல்லாமே வெற்றி பெறணுமே
ப்ரீத்தி ஸோடியாக் மிக்ஸியை வைத்து அந்த மூன்று அணிகளும் சிறப்பாகவே செய்தனர். என்ன செய்தனர், எல்லாத்தையும் ப்ரீத்தி மிக்ஸியே செய்து விட்டது. அப்புறம், எப்படி இதில் வெற்றி பெற்ற அணி அர்ச்சனா அணி என தீர்ப்பு சொன்னார்கள், மூன்று அணிகளுமே வெற்றி பெற்றால் தானே ப்ரீத்தி மிக்ஸி எல்லாத்திலேயும் சூப்பர் பர்ஃபார்ம் என்று சொல்ல முடியும். வெற்றி பெற்ற அணியினருக்கு மிக்ஸி ஒன்றை பரிசாக கொடுத்து அந்த டாஸ்க்கை முடித்து விட்டனர்.

சோப்பு விளம்பரம்
இன்னும் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் விளம்பரதாரர்கள் யாரெல்லாம் என்று பார்த்தால், சிந்தால் சோப் இருக்கிறது. பிக் பாஸ் போட்டியாளர்களை எல்லாம் நடு வீட்டில், பாத் டப் வைத்து அடுத்து குளித்து விட்டு யார் உடம்பில் நல்லா அழுக்கு போயிருக்கு என டாஸ்க் கொடுத்தாலும் ஆச்சர்யபடுவதற்கு இல்லை. முடியல பிக் பாஸ்!

கமல் பிறந்தநாள்
சனிக்கிழமையான இன்று நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாள், பிக் பாஸ் வீட்டில் எல்லாமே இந்த முறை முதல் முறை என்பதால், இன்றைய நிகழ்ச்சி எப்படி களைகட்டப் போகுதோ என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். முக்கியமா? காலையிலேயே தலைவர் என்ன காஸ்ட்யூமில் புரமோவில் எப்படி கலக்கப் போகிறார் என்பதையும் காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.


Click it and Unblock the Notifications











