Don't Miss!
- News தலைகீழாக கட்டி தோலை உரிப்பேன்..என்னது மம்தாவா? வங்கத்தில் கொந்தளித்த அமித் ஷா! இப்படி சொல்லிட்டாரே!
- Finance மோனாலிசா ஓவியத்தை பாட வைத்த மைக்ரோசாப்ட் ஏஐ vasa -1.. அசரவைக்கும் வீடியோ..!
- Sports முத்துப்பாண்டிய அவன் கோட்டைலயே அடிச்சிட்டாங்க.. சிஎஸ்கேவை பொளக்கும் ரசிகர்கள்.. வெறித்தன மீம்ஸ்!
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அர்ச்சனாவுக்கு அட்வைஸ் பண்ண அக்கா.. எனக்கே இதெல்லாம் சொல்லலையே என சண்டைக்கு வந்த ரம்யா பாண்டியன்!
சென்னை: பிக் பாஸ் பிரபலமான அர்ச்சனாவும் ரம்யா பாண்டியன் அக்காவும் எடுத்து கொண்ட செல்ஃபி வைரலாகி வருகிறது.
ரம்யா பாண்டியன் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போது வெளியே அவருக்காக ஃபுல் சப்போர்ட் பண்ணி வாங்கிக் கட்டிக் கொண்டதும் அவரது அக்கா தான்.
இந்நிலையில், ரம்யா பாண்டியன் அக்கா கொடுத்த அட்வைஸ் குறித்து அர்ச்சனா போட்டுள்ள இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
அக்காவுடன் செல்ஃபி
ரம்யா பாண்டியனின் அக்கா சுந்தரி திவ்யா பாண்டியன் உடன் பிக் பாஸ் பிரபலம் அர்ச்சனா எடுத்துக் கொண்ட செல்ஃபி இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அர்ச்சனா அந்த செல்ஃபியை ஷேர் செய்து லைக்குகளை குவித்து வருகிறார்.
அர்ச்சனாவுக்கு அட்வைஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நான் சந்தித்த மனிதர்களில் இவர் மிகவும் அற்புதமானவர் என பதிவிட்டுள்ள அர்ச்சனா, ரம்யா பாண்டியனின் சகோதரி தனக்கு கொடுத்த சூப்பரான அட்வைஸ் குறித்தும் கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார். யாருக்காகவும் உங்கள் கேரக்டரை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டாம். அது தான் உங்கள் உண்மை தன்மை எனக் கூறினார். அவருடைய அட்வைஸ் எனக்கு மிகவும் பிடித்துள்ளது என நன்றி தெரிவித்துள்ளார்.
எனக்கு இதெல்லாம் சொல்லலையே
இந்த போஸ்ட்டை பார்த்த உடனே சண்டைக்கு வந்த ரம்யா பாண்டியன், என் அக்கா எனக்கே இதெல்லாம் சொல்லலையே என கமெண்ட் செய்ய பிக் பாஸ் ரசிகர்களின் கவனம் முழுக்க அர்ச்சனாவின் இந்த போஸ்ட்டை சுற்றியே மொய்க்க ஆரம்பித்து விட்டது. ஏகப்பட்ட லைக்குகளும் கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.
இரிடேட் ஆகுது
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தும் இந்த இரண்டு மூஞ்சியை பார்த்தாலும் இன்னுமே ஏன் தான் இரிடேட் ஆகுதுன்னு தெரியல, தயவு செஞ்சு அடிக்கடி இப்படி போஸ்ட் போட்டு கொடுமை கொடுக்காதீங்க என அர்ச்சனா ஹேட்டர்ஸும் கமெண்ட் செக்ஷனில் கழுவி ஊற்றி வருகின்றனர்.
நீங்க வாங்க
ரம்யா பாண்டியன் அக்கா சுந்தரி திவ்யா பாண்டியன் அடுத்த பிக் பாஸ் சீசனில் போட்டியாளராக வந்தால் வேற லெவலில் நிகழ்ச்சி களைகட்டும் என்றும், டைரக்டாகவே தொகுப்பாளர் குறித்து கமெண்ட் அடித்து நிகழ்ச்சியின் டிஆர்பியை எகிற விடுவார் என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.