இந்த அர்ச்சனா போடுற சீன் இருக்கே.. எவிக்‌ஷன் லிஸ்ட்லயே இல்லை.. இவங்க வெளிய போறாங்களாம்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே தற்கொலை, இடுப்பு புடிச்சிட்டான்னு கதறியது, கையில் வெட்டிக் கொண்டது, மருத்துவ முத்தம் என ஏகப்பட்ட எக்ஸ்ட்ரீம்களை பார்த்த ரசிகர்கள், இப்போ போட்டோவை எரித்து நாமினேட் செய்யும் கொடுமையையும் பார்த்து ரசிக்கின்றனர்.

தலைவர் பதவி கிடைச்சிட்ட அர்ச்சனா அக்கா, நாமினேஷன் லிஸ்ட்லயே இல்லை.

ஆனால், இந்த வாரம் நான் வெளியே போறேன்னு சுரேஷ் தாத்தாவிடம் சொல்வதெல்லாம் உலக மகா நடிப்புடா சாமி.

செம போரிங்

செம போரிங்

ஒரு மணி நேரம் நச்சுன்னு போட்டுட்டு இருந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை இப்படி 4 மணி நேரம் போடுறேன்னு சொல்லி, ரம்பமாக அறுப்பதை பார்த்த ரசிகர்கள், ரொம்ப போரிங் என சேனலை மாற்ற துவங்கி விட்டனர். ஆனால், அப்பப்போ சின்ன சின்ன பிரச்சனைகளை கிளப்பி சுவாரஸ்யம் கொடுப்பாங்கன்னு நம்பி பல பேர் பிக் பாஸையும் பார்த்து வருகின்றனர்.

தீயில் போட்டு கொளுத்துங்கள்

தீயில் போட்டு கொளுத்துங்கள்

இந்த வீட்டில் இருக்க தகுதி இல்லாதவர்கள் என நினைப்பவர்களை வார வாரம் ஹவுஸ்மேட்ஸ் எவிக்‌ஷனுக்கு நாமினேட் செய்வாங்க, மறைமுகமாகவும் ரகசியமாகவும் நடந்த எவிக்‌ஷன் புராசஸ் இப்போ சண்டையை மூட்டி விடுவதற்காக போட்டோக்களை எரிக்க வைத்தனர்.

எத்தனை பேர்

எத்தனை பேர்

இதுவரை இந்த சீசனில் அதிக பட்சமாக 7 பேர் தான் நாமினேட் ஆகி இருந்தனர் என ஷிவானி நாராயணன் அவங்க பிக் பாஸ் வீட்டு மம்மி சம்யுக்தாவிடம் சொல்லிட்டு இருந்தப்போ, ஷிவானியின் லுக்கை தான் பலரும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்திருப்பார்கள். இந்த முறை ஒருத்தர் ஒருத்தர் மாற்றி மாற்றி எவிக்‌ஷனுக்கு நாமினேட் செய்ததால் 11 பேர் நாமினேட் ஆகி விட்டனர்.

அர்ச்சனா எஸ்கேப்

அர்ச்சனா எஸ்கேப்

சா பூ த்ரி, டாஸ், இங்கி பிங்கி பாங்கி என சூப்பரான கேம் ஏதாவது விளையாடி இருந்தால் கூட சனம் ஷெட்டி அல்லது பாலாஜி முருகதாஸ் தலைவராக தேர்வாகி இருப்பார். புகார்களும் குவிந்திருக்கும். அர்ச்சனா அக்காவை ஹவுஸ்மேட்கள் தலைவராக தேர்வு செய்ததால் இந்த வாரம் எவிக்‌ஷனில் இருந்து அவங்க எஸ்கேப்.

இந்த வாரம் நான் தான்

இந்த வாரம் நான் தான்

பாத்ரூம் ஏரியாவில் இருந்த அர்ச்சனாவிடம் இந்த வாரம் கன்ஃபார்ம் நான் தான் வெளியே போறேன் என சுரேஷ் தாத்தா புலம்ப ஆரம்பித்தார். இப்படி பேசி பேசியே கடைசி வரைக்கும் இந்த வீட்டில் டேரா போட்டு விடுவார் போல தெரிகிறது. வர வர இவரது இம்சைகளும் குசும்புத் தனங்களும் ரொம்பவே இரிடேட் ஆகிறது.

ஓவரா சீன் போட்ட அர்ச்சனா

ஓவரா சீன் போட்ட அர்ச்சனா

இல்லை சுரேஷ் சார் இந்த வாரம் நான் தான் கண்டிப்பா வெளியே போகப் போறேன். இந்த வீட்டில இருந்துக்கிட்டு எனக்கு ரொம்பவே கெட்டப் பேரு கிடைக்குது. இதெல்லாம் வீட்டில் இருப்பவங்க பார்த்தா என்ன ஆகும். என் பொண்ணை ரொம்ப மிஸ் பண்றேன் என அர்ச்சனா பேசியதை பார்த்த நெட்டிசன்கள் ஓவரா சீன் போடாதீங்க அர்ச்சனா என கமெண்ட்டுகளால் குட்டி வருகின்றனர்.

கட்டிப் பிடித்து ஆறுதல்

கட்டிப் பிடித்து ஆறுதல்

தாத்தா எதுக்கு சீன் போட்டாருன்னு கடைசியா அர்ச்சனாவை கட்டிப் புடிச்சி கட்டிப் பிடி வைத்தியம் பண்ணும் போது தான் அவரோட அந்த பிளானே தெரிஞ்சுது. கேபி சொன்ன மாதிரியே தாத்தாவுக்கு ரொம்பவே குசும்பு தான். ஆனால், தலைவர் பதவி வச்சிட்டு நாமினேஷன் ஆகாத அர்ச்சனா அக்கா வீட்டுக்கு போறேன்னு சொல்றதெல்லாம் முடியல.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X