சுசித்ரா ‘அதுக்கு’ லாயக்கே இல்லை.. சனமை டார்கெட் பண்ண விஷயம்.. கிழித்து தொங்க விட்ட அர்ச்சனா!
சென்னை: சுசித்ரா பிக் பாஸ் வீட்டின் நீதிபதியாக இருக்க லாயக்கே இல்லை என சனம் ஷெட்டியும், அர்ச்சனா அக்காவும் பேசியதை பார்த்த ரசிகர்கள், உண்மை தான் என்கிற படி தலையாட்டி வருகின்றனர்.
பாலா இடையே பேசும் போது ஒண்ணும் சொல்லாத சுசித்ரா, சம்யுக்தா இடைமறித்து பேசும் போது அனுமதி கொடுத்த சுசித்ரா, சனம் ஷெட்டி பேசும் போது மட்டும் ஏன் தடுத்தார் என்கிற கேள்வியை அர்ச்சனா அக்கா எடுத்து வைத்து மறுபடியும் தனது ஆட்டத்தை துவங்கி உள்ளார்.

சண்டை போடத்தான் டாஸ்க்
பிக் பாஸ் வீட்டில் வந்து விட்டு, கறியும் மீனும் தின்னுட்டு போகவா போட்டியாளர்களை தேர்வு செய்றாங்க, நல்லா சண்டை போட்டு டி.ஆர்.பியை ஏற்றித் தரத்தானே இவ்வளவு பெரிய நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். அதிலும், அந்த நாரதர் பிக் பாஸ் சண்டைகளை உருவாக்கவே ஒவ்வொரு டாஸ்க்கையும் டிசைன் பண்ணி அனுப்புகிறார்.

லாயக்கே இல்லை
சுசித்ரா நீதிபதியாக இருக்க லாயக்கே இல்லை என்பது சனம் ஷெட்டியை பேச விடாமல் அவர் பண்ண ஓவர் ரியாக்ஷனின் போதே அம்பலமாகி விட்டது. வாதத்தை வைத்து தீர்ப்பு சொல்வதற்கு பதிலாக, கையை தூக்கி ஓட்டுப் போட்டு மெஜாரிட்டி பார்த்து தீர்ப்பு சொல்லும் நீதிபதியை இங்கே தான் காண முடியும்.

இது ரொம்ப அநியாயம்
ஆரி பேசும் போது பாலாஜி முருகதாஸ், ஏகப்பட்ட முறை பின்னாடி உட்கார்ந்து கொண்டு பேசும் போதெல்லாம் அமைதியா இருந்த நீதிபதி சுசித்ரா, சனம் ஷெட்டி பேசிய உடனே அவருக்கு வார்னிங் கொடுப்பதும், தொடர்ந்து அவரை டார்கெட் செய்து வெளியே அனுப்பவதுமாக செயல்பட்டதை பார்த்த ரசிகர்கள் இது ரொம்ப அநியாயம் என்று சுச்சிக்கு எதிராக கமெண்ட்டுகளை கொட்டி வருகின்றனர்.
Recommended Video

ஆட்டத்தை ஆரம்பித்த ஆர்ச்சனா
சுசித்ரா ஆரம்பத்தில் இருந்தே ஒருத்தருக்கு சார்பாகவே தீர்ப்பு சொல்லி வந்ததை நானும் தான் கவனித்தேன். சீக்கிரமே அவளுக்கு வச்சிக்கிறேன் கச்சேரியை என சனம் ஷெட்டியுடன் பேசிய தோரணையை பார்த்த ரசிகர்கள், சுசித்ராவுக்கு அர்ச்சனாவின் ஆட்டமே சூப்பர் என்றும், சீக்கிரமே வாங்க அக்கா என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











