நல்லா பண்றீங்க.. அர்ச்சனா அக்கா தம்பி சோம்க்கு ரம்யாவை செட் பண்ணாம விடமாட்டாங்க போல?
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் அர்ச்சனா, ரம்யா பாண்டியன், சோமசேகர் இடையே சின்னதாய் ஒரு சுவாரஸ்ய நிகழ்வு தனி டிராக்கில் சென்று கொண்டு இருந்தது.
பாலாஜி முருகதாஸையும், ஷிவானியையும் சேர்த்து வைக்க சம்யுக்தா ஒரு பக்கம் மாமி வேலையை பண்ணி வந்தது பாதியிலே சொதப்பலாகி நிற்கிறது.
இந்நிலையில், எப்படியோ தனது பிக் பாஸ் வீட்டு தம்பிக்கு ரம்யாவை செட் பண்ணி விட முழு நேர டூட்டியில் இறங்கி இருக்கிறார் அர்ச்சனா அக்கா.

பிக் பாஸ் பண்ண வேலை
இதற்கெல்லாம் முதல் காரணமே பிக் பாஸ் தான். சம்யுக்தா கூட ஜோடியாக இருந்த சோமசேகரை பாட்டி சொல்லைத் தட்டாதே டாஸ்க்கில் இருந்து, ரம்யா பாண்டியன் பக்கம் ஜோடியாக்கி இன்னொரு காதல் பிக் பாஸ் வீட்டில் பூக்க முன்னுரை எழுதினார். அதனை அப்படியே அர்ச்சனா அக்கா இப்போ பின் பற்றி வருகிறார்.

ரம்யா டார்லிங்
நடிக்க சொன்ன இடத்தில் நடிப்பையும் தாண்டி ஹீரோயின் ரம்யாவை வளைத்து விட்டால், சூரரைப் போற்று படத்தில் சைடு ரோலில் நடித்தது போல இனியும் தொடராமல், நாமும் ஒரு படத்தில் ஹீரோவாகி விடலாம் என்கிற எதிர்கால சிந்தனையில், ரம்யாவை டார்லிங் போட்டு, தனி லவ் டிராக்கை உருவாக்க முடிந்த அளவுக்கு சோமசேகர் முயற்சி செய்து வருகிறார்.

ரம்யாவுக்கு ஓகே இல்லை
ஏற்கனவே ரம்யா பாண்டியனுக்கு வெளியே நிச்சயம் ஒரு ஆள் இருக்கும் என்றே தெரிகிறது. சோமசேகர் என்ன தான் அசடு வழிந்து கிட்டே வந்தாலும், ரம்யா பாண்டியன், நாசுக்காக கேம் ஆடுவதை போலவே அவரை நல்லா நோஸ் கட் பண்ணிட்டுத் தான் வருகிறார். ஆனால், இந்த அர்ச்சனா அக்கா தான் தம்பிக்காக ரொம்பவே பாடாய் பட ஆரம்பித்துள்ளார்.

பெண் பார்க்கும் படலம்
அர்ச்சனா, ரம்யா, சோமசேகர் நேற்று தனியாக ஒரு சின்ன பெண் பார்க்கும் படலத்தையே நடத்தினர். சோமே இவ பேரு தான் ராஜலக்ஷ்மி என அர்ச்சனா அறிமுகம் பண்ண, அய்யய்யோ அந்த பேர் நல்லா இல்லை, வேற பேர் சொல்லுங்க என்றார் ரம்யா, இது என்னோட மாமியார் பேரும்மா என சொன்ன அர்ச்சனா, வேறு சில பெயர்களையும் வைத்தார்.
Recommended Video

சுத்தமா பிடிக்கல
ஆனால், ரம்யா பாண்டியனுக்கு தொடர்ந்து அர்ச்சனா வைத்த எந்த பெயரும் பிடிக்காதவரை போல நடித்து, ஜொள்ளு வழிய கிட்டே நெருங்க காத்திருந்த சோமசேகரை, விளையாட்டாகவே பேசி ஆஃப் பண்ணிட்டு இருந்தார். அதன் பின்னர், கடைசியாக ரம்யா என அவருக்கு அவருடைய பெயரையே வைக்க ஓகே சொன்னார். ஆனால், சோமுக்கு இந்த சீசனில் ரம்யா ஓகே சொல்வாரா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











