பாஸ்ஸி குமார் என்ற கேபி.. கண்ணீர்விட்ட அர்ச்சனா.. காலையிலேயே காலி பண்ணியதாக கதறல்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை பாஸ்ஸி குமார் என்று கூறியதால் அப்செட்டான அர்ச்சனா கண்ணீர்விட்டு அழுதார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் மார்னிங் ஆக்ட்டிவிட்டி கொடுக்கப்பட்டது.

இதில் குமார் என்பதை பல மாடுலேஷன்களில் சொல்ல வேண்டும் என சோம சேகருக்கு டாஸ்க் கொடுத்திருந்தார் பிக்பாஸ்.

குமாரான அர்ச்சனா

குமாரான அர்ச்சனா

தான் பல மாடுலேஷன்களில் டாஸ்க்கை முடித்து விட்டு ஹவுஸ் மேட்ஸை செய்ய சொன்னார். அப்போது குமார் டாஸ்க்கை செய்த அர்ச்சனா, சோம் வா பாத்திரம் தேய்க்கணும் சமைக்கணும் என்று அதிகாரமாக அழைத்தார்.

பாஸ்ஸி குமார்

பாஸ்ஸி குமார்

இதனால் சோகக் குமாரானார் சோம். இதனை பார்த்த கேபி, அர்ச்சனாவின் ஆக்டிங்கை பார்த்து பாஸ்ஸி குமார் என கத்தினார். இதனால் கடுப்பான அர்ச்சனா, அவ மறந்தாலும், இவ மறக்கவிட மாட்டா போல.. இனிமே அந்த வார்த்தைய சொன்னா எனக்கு செம கோபம் வந்துடும் சொல்லிட்டேன் என்று எச்சரித்தார்.

மன்னிப்பு கேட்ட கேபி

மன்னிப்பு கேட்ட கேபி

இதனை சற்றும் எதிர்பாராத கேபியின் முகம் அப்படியே மாறிவிட்டது. பின்னர் அர்ச்சனா மன்னிச்சுடுங்க என்றார் என்று மன்னிப்பு கேட்டார் கேபி. அப்போது ஓகே என்பதை போல் தம்ஸ்அப் செய்தார் அர்ச்சனா.

கேள்வி கேட்ட ரியோ

கேள்வி கேட்ட ரியோ

ஆனால் அதன்பிறகு அதே கோபத்தில் இருந்தார். கிட்சனில் டல்லாக இருந்தார் அர்ச்சனா. இதனை பார்த்த ரியோ என்ன ஆச்சு, ஏன் இப்படி இருக்க என்று கேட்டார். இனிமே இப்படிதான் இருக்கப் போகிறேன் என்றார் அர்ச்சனா.

உன் வேலையை பாரு

உன் வேலையை பாரு

நிஷாவிடம் என்ன ஆனது என்று கேட்க, நிஷா வாய்க்குள்ளேயே பாஸ்ஸி குமார் என்று கூறியது என்றார். இதனை கவனித்த அர்ச்சனா, நிஷா உன் வேலையை மட்டும் பாரு என்று எச்சரித்தார். புரடவை மாத்தனும் சீக்கிரம் கிளம்பனும், நிறைய வேலை இருக்கு என்றார்.

உனக்கு அந்த வலி புரியும்

உனக்கு அந்த வலி புரியும்

தொடர்ந்து கார்டன் ஏரியாவில் அமைதியாக அமர்ந்திருந்த அர்ச்சனாவிடம், ஏன் டல்லா இருக்க என்றார் நிஷா. அதற்கு வேற ஆப்ஷன் இல்லையே என்று கண்ணீர்விட்டார் அர்ச்சனா, உன்னை அந்த வார்த்தை சொன்னால்தான் அந்த வலி உனக்கு புரியும். இந்த வீட்டில் எப்படி பாஸ்ஸியாக இருக்க முடியும். இருக்க விடுவார்களா-

ஹர்ட் பண்ணிடுறாங்க

ஹர்ட் பண்ணிடுறாங்க

அதே வார்த்தையை சொல்வது ரொம்ப ஹர்ட்டாக்குது. காலையிலேயே எழுந்து ஒரு டாஸ்க் பண்றோம். அப்போ இந்த மாதிரி சொல்லி காலையிலேயே ஹர்ட் பண்ணிடுறாங்க என்று நிஷாவிடம் ஆதங்கப்பட்டார் அர்ச்சனா.

அர்ச்சனாவுக்கு அலர்ஜி

அர்ச்சனாவுக்கு அலர்ஜி

கடந்த ஞாயிற்றுக் கிழமை எபிசோடில் கமலிடம் பேசிய ரம்யா பாண்டியன், அர்ச்சனா பாஸ்ஸியாக நடந்து கொள்கிறார். யாராவது ஏதாவது சொல்லிவிட்டால் ரொம்ப சர்க்காஸ்டிக்காய் ஹர்ட் பண்ணிவிடுவார் என்றார். இதனால் பாஸ்ஸி என்ற வார்த்தையை கேட்டாலே அர்ச்சனாவுக்கு அலர்ஜியாய் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X