For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நீ ராஜா ஆகணும்டா.. அர்ச்சனா அக்கா மாஸ்டர் பிளான்.. பாலாவையும் தனது குரூப்பில் சேர்த்துட்டாங்க!

  |

  சென்னை: குரூபிஸத்துக்கு எதிராக பிக் பாஸ் வீட்டில் குரல் கொடுத்த ஒரே குழந்தையையும் அம்மா சென்டிமென்ட்டை வச்சு அர்ச்சனா அக்கா மடக்கிட்டாங்க..

  இதுக்கா மூச்சை பிடிச்சிக்கிட்டு இவ்ளோ நேரம் கத்துனோம்னு ரியோவுக்கு இந்நேரம் கடுப்பாகி இருக்கும்.

  பாலாவை வேற ஒரு பிளான் போட்டு அர்ச்சனா அக்கா ஆஃப் பண்ணி வச்சிருக்காங்களா இல்லையாங்கறது கூடிய சீக்கிரமே தெரிஞ்சுடும்.

  அடப்பாவிகளா.. அர்னால்டையே அழ வச்சிட்டீங்களே.. கதறி அழுத பாலா.. கர்ச்சீப் நீட்டும் ரசிகைகள்!

  மன்னிப்பு கேட்ட பாலா

  மன்னிப்பு கேட்ட பாலா

  நான் தலைவனா ஆகிட்டா வீட்ல இருக்க எல்லாரையும் அம்மி அரைக்க வைப்பேன் என தான் பேசியது தவறு என்றும் அதற்காக அனைத்து பிக் பாஸ் ஹவுஸ்மேட்களிடமும் மன்னிப்பு கேட்க தயார் என பிக் பாஸ் வீட்டு புதிய மதர் தெரசா சம்யுக்தாவிடம் பேசிய பிறகு பாலா டோட்டலாக மாறி விட்டார்.

  சின்ன குழந்தை இல்லை

  சின்ன குழந்தை இல்லை

  பிக் பாஸ் வீட்டின் லைட்டுகள் ஆஃப் செய்யப்பட்ட பின்னர், படுக்கை அறையில் பாலா படுத்துக் கொண்டு இருக்கும் போது, நீ போய் ஒரு வார்த்தை பேசு, என சுரேஷ் தாத்தா சொல்லவும், நீ தாத்தாவை கூட்டிட்டுப் போய் பேசு என சம்யுக்தா சொன்னார். உடனே, யாரும் வேண்டாம் நீ ஒண்ணும் சின்னக் குழந்தை இல்லை நீயே போய் பேசு என்றவுடன் பாலா இந்த பிரச்சனைக்கு நைட்டே முற்றுப் புள்ளி வைத்து விடலாம் என அர்ச்சனாவிடம் சென்றார்.

  பஞ்சாயத்து பண்ண சம்யுக்தா

  பஞ்சாயத்து பண்ண சம்யுக்தா

  சுரேஷ் தாத்தா நைஸா எஸ்கேப் ஆனாலும், சம்யுக்தா பாலா பக்கம் ஃபுல் சப்போர்ட்டாக இருந்து அர்ச்சனாவிடம் இந்த பஞ்சாயத்தை இரவோடு இரவாக பேசி தீர்க்க முனைந்தார். அம்மி மேட்டருக்கு மன்னிப்பு கேட்ட பாலா, பாதி தூக்கத்தில் இருந்தேன், நீங்க பேசுனது மட்டும் கேட்ட உடன் கோபத்துல வெடிச்சுட்டேன் என அர்ச்சனாவிடம் மன்னிப்பு கேட்டார்.

  என் குழந்தை மேல சத்தியமா

  என் குழந்தை மேல சத்தியமா

  சம்யுக்தா நீங்க எப்படி ஆஜீத்தை குழந்தை மாதிரி பார்க்குறீங்களோ, அதே மாதிரி நான் இந்த வீட்டுக்கு வந்த உடனே பாலா எனக்கு குழந்தை மாதிரி தெரிஞ்சான், என் குழந்தை மேல சத்தியமா சொல்றேன் அவன் மேல எனக்கு ஒரு சதவீதம் வெறுப்புக் கூட இல்லை. என் குழந்தையை அவனுக்குள்ள தேடுனேன் ஆனால் அவர் இல்லைன்னு சொல்லிட்டார் என அர்ச்சனா அழ ஆரம்பித்துவிட்டார்.

  அர்ச்சனா அம்மா

  அர்ச்சனா அம்மா

  எனக்கு புள்ளை கிடையாதுடா.. உன்னை என் புள்ளையா நினைச்சேன் டா என மறுபடியும் அழுது புலம்பி பாலாவின் மனதை டோட்டலாக உடைத்து விட்டார் அர்ச்சனா. அவரும், சாரிம்மா என அருகே வந்து, எனக்கு இப்படி எல்லாம் பாசம் கிடைச்சதே இல்லை. எங்க அம்மாவும் அப்பாவும் குடிச்சிட்டு, என்ன சரியா வளர்க்கலை என்பதை மனதில் வைத்துக் கொண்டு பேச ஆரம்பித்து விட்டார்.

  மாஸ்டர் பிளானா?

  மாஸ்டர் பிளானா?

  பிக் பாஸ் வீட்டில் யாரும் யாருக்கும் நண்பர்கள் கிடையாது என்று சொல்லும் போட்டியாளர்கள், அம்மா, புள்ளைன்னு சொந்தம் கொண்டாடுவதெல்லாம் இதுவும் ஒரு மைண்ட் கேம் தானோ என்று தான் தோன்றுகிறது. பாலா மீது ஒரு சதவீதம் கூட வெறுப்பு இல்லாத அர்ச்சனா தான் பாலாவை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என ஒவ்வொரு முறையும் எவிக்‌ஷனுக்கு நாமினேட் செய்வதெல்லாம் ஹேட்ரட் கிடையாதா? குரூபிஸம் இருக்குன்னு ஓப்பனா சொன்ன பாலாவையும் ஆக்டிங் பண்ணி அர்ச்சனா அவரோட குரூப்பில் சேர்த்து விட்டார்.

  நீ ராஜா ஆகணும்டா

  நீ ராஜா ஆகணும்டா

  மேலும், அர்ச்சனா அக்கா அந்த புலம்பலிலும் நான் இன்னும் 3 வாரத்துல வீட்டை விட்டு போயிடுவேன். நீ கடைசி வரைக்கும் இந்த பிக் பாஸ் வீட்டுல இருக்கணும்டா.. ஜெயிக்கணும்டா.. நீ ராஜா ஆகணும்டா என நல்லா கொம்பு சீவி விடும் போது தான் அர்ச்சனாவின் மேல் எழுந்த சந்தேகம் இன்னமும் அதிகமாகிறது. பாவம் பாசத்துக்கு ஏமாந்து பலி கடா ஆகப் போகிறாரா பாலா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

  பாவம் ரியோ

  பாவம் ரியோ

  அர்ச்சனா அக்காவுக்காக இறங்கி பாலாவிடம் சண்டை போட்டுக் கொண்டு இருக்கும் ரியோ ராஜை வீட்டை விட்டு துரத்த பாலாவை அர்ச்சனா தனது அணியில் சேர்த்துக் கொண்டாரா என்கிற சந்தேகமும் எழுகிறது. உனக்காகத் தானே அக்கா சண்டை போட்டேன், இப்படி பொசுக்குன்னு புள்ளைன்னு சொல்லி எனக்கு வேட்டு வச்சிட்டியே என்று ரியோ கருதுவதாக ஏகப்பட்ட மீம்களும் குவிகின்றன.

  English summary
  Archana wants Balaji to win the Bigg Boss Tamil season 4 crown. But it was her master plan both Rio and Bala out of this game.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X