பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற விரும்பும் ராஜமாதா.. கமல் பொட்டில் அடித்தது போல் சொன்ன விஷயம்!
சென்னை: நடிகை அர்ச்சனா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற விருப்பம் தெரிவித்தது குறித்து நடிகர் கமல் பதில் அளித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக வந்த நாள் முதலே ஓவராக டாமினேஷன் செய்து வருகிறார்.
இதனால் சமூக வலைதளங்களில் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர். ராஜா மாதா கெட்டப்பில் இருந்ததால் அவர் ரியல் ராஜமாதாவாகப் பார்க்கிறார் என விமர்சித்தனர்.

பிக்பாஸா?
சனம் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தியின் பிரச்சனையின் போதும் கூட ஓவர் டாமினேஷன் செய்தார். இதனால் அர்ச்சனா போட்டியாளரா அல்லது பிக்பாஸா என்ற விமர்சனமும் எழுந்தது.

இனிமே எனக்கு என்ன?
இதுதொடர்பாக விசாரித்த கமல், நீங்கள் ஒரு போட்டியாளராய் இருங்கள், ஆங்கரிங் பண்ண வேண்டாம் என விளாசிவிட்டார். இதனால் நொந்து போன அர்ச்சனா, இனிமே எனக்கு என்ன? என தனது சகாக்களிடம் பேசினார். உங்களுக்கு ஏதாவது ஒன்று என்றால்தான் வருவேன் என்றார்.

நான் வெளியேற விரும்புகிறேன்
அந்த வாரமே சுரேஷிடம் நான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே போக விரும்புகிறேன் என்றார். இந்நிலையில் நேற்று ரியோ மற்றும் சோம் சேகரிடம் நான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற விரும்புகிறேன் என்றார் அர்ச்சனா.

பெரும் பாரமாக உள்ளது
இதுகுறித்து கமல் கேட்டபோது இங்கு நடக்கும் சில விஷயங்கள் எனக்கு கஷ்டமாக இருக்கிறது. நான் ஜாலியான ஒரு பர்சன், இங்கு நடக்கும் விஷயங்கள் எல்லாம் என் தலையில் பெரும் பாரமாக உள்ளது என்றார் அர்ச்சனா.

மக்கள்தான் முடிவு செய்யவேண்டும்
மேலும் சனத்தின் எலுமிச்சை பழம் மற்றும் ரியோவின் சப்பாத்தி விவகாரம் குறித்து பேசினார் அர்ச்சனார. இதனைக் கேட்ட கமல், நீங்கள் நினைக்கும் போதெல்லாம் இங்கிருந்து செல்ல முடியாது. மக்கள்தான் அதை முடிவு செய்ய வேண்டும். பொறுமையாக இருங்கள் என்றார் கமல்.


Click it and Unblock the Notifications











