அவர் என்னைக்குமே அண்ணன்..எந்த துரோகமும் பண்ணல..மாறி மாறி மன்னிப்பு..மிஷ்கின் விஷால் பஞ்சாயத்து ஓவரா!
சென்னை: நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் மிஷ்கினுக்கும் ஏற்கனவே தகராறு இருக்கும் நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய விஷால் அவரை நான் என்னைக்குமே அண்ணனாகத்தான் பார்க்கிறேன் என்றார்.
செல்லமே படத்தின் மூலம் கதாநாயகரான அறிமுகமான விஷால், சண்டைக்கோழி படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக மாறினார்.

தனது உடல்வாகுக்கு ஆக்ஷன் படம் தான் செட் ஆகும் என நினைத்த விஷால், திமிரு, பாண்டிய நாடு, மருது, துப்பறிவாளன் போன்ற படங்களில் நடித்தார். தற்போது துப்பறிவாளன் 2, மார்க் ஆண்டனி படத்தில் விஷால் நடித்துள்ளார்.
நடிகர் விஷால் பிறந்த நாள்: நடிகர் விஷாலின் 46வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்திற்கு சென்ற விஷால், அங்கிருக்கும் ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு வழங்கி பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த விஷால் பல விஷயங்கள் குறித்து பேசினார்.
என்னைக்குமே அண்ணன்: அப்போது, மிஷ்கினுடனான செய்தியாளர் ஒருவர், மிஷ்கினுடன் மீண்டும் நீங்கள் இணைந்து படம் செய்வீர்களா? என கேட்டார். இதற்கு பதிலளித்த விஷால், துப்பறிவாளன் 2 படத்தை நான் இயக்குகிறேன். அவருடைய திரைக்கதையைத் தான் அதை மாற்றி அமைத்து இருக்கிறோம் இப்படம், ஆண்டு வெளியாகும். நான் ரசிக்க கூடிய இயக்குநர்களின் பட்டியலில் நிச்சயமாக அவர் இருப்பார். அவரை நான் என்னைக்குமே அண்ணன் ஸ்தானத்தில் பார்க்கிறேன் என்று பேசி இருந்தார்.

கோவத்தில் சொல்லிவிட்டேன்: அண்மையில் அடியே ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய மிஸ்கின், பொறுக்கி என்று கோவத்தில் சொன்ன வார்த்தை, விஷால் என் இதயத்துக்கு நெருக்கமானவர். நல்ல நட்பு சண்டை போடாமல் எப்படி வாழ முடியும்? நான் அவரை மிஸ் செய்கிறேன், என்னைக்கும் அவனுக்கு துரோகம் பண்ண மாட்டேன் என்று பேசி இருந்தார். இப்படி மாறி மாறி இருவரும் மன்னிப்பு கேட்டுக்கொண்டு வருவதால், இருவரும் இணைந்து படம் தயாரிப்பாளக்ள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிய காரணம்: விஷாலின் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான துப்பறிவாளன் படம் ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமாக வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து துப்பறிவாளன் 2 திரைப்படம் அதே கூட்டணியில் உருவாக திட்டமிடப்பட்டது. ஆனால், இப்படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்ற சமயத்தில் இயக்குனர் மிஷ்கினுக்கும் விஷாலுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











