நொந்து போன சேரன்.. இனியாவது ஆர்மியினரை கண்டிப்பார்களா கவினும் லாஸ்லியாவும்?
சென்னை: மிகவும் நொந்துபோய் டிவிட்டியிருக்கிறார் சேரன்.. இதனை பார்த்தாவது கவினும் லாஸ்லியாவும் தங்களின் ரசிகர்களை கண்டிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார் இயக்குநர் சேரன். இதில் பங்கேற்ற சக போட்டியாளரான இலங்கையை சேர்ந்த லாஸ்லியா சேரன், தனது அப்பாவின் சாயலில் இருப்பதாக கூறி, அவரை சேரப்பா சேரப்பா என்று அழைத்து வந்தார்.
சேரனும் பெற்று மகளுக்கு இணையாக லாஸ்லியா மீது அன்பையும் அக்கறையையும் கட்டினார். அப்போதெல்லாம் கவினும் சேரனுடன் நல்ல நட்புடனே இருந்தார்.

தவறாக பேசிய கவின்
ஆனால் கவினுக்கும் லாஸ்லியாவுக்கும் இடையில் காதல் மலர்ந்தது. அன்று முதல் கவின், சேரனிடம் இருந்து விலகியதோடு, சேரன் குறித்தும் தவறாக லாஸ்லியாவிடம் பேசி வந்தார்.

கமலிடம் புகார்
லாஸ்லியாவை வைத்து சேரன் டிராமா பண்ணுவதாகவும் லாஸ்லியாவிடம் கூறி பிரெய்ன் வாஷ் செய்தார். கவினின் வார்த்தைகளை நம்பி சேரன் மீது சந்தேகப்பட்ட லாஸ்லியா, அவர் நடிப்பதாக கமலிடமே புகார் கூறினார்.

பிரிவை ஏற்படுத்தினார்
லாஸ்லியாவின் இந்த பேச்சால் அப்போதே நொந்துபோனார் சேரன் கண்ணீர் விட்டார். கவின் மற்றும் லாஸ்லியாவின் காதலுக்கு சேரன் குறுக்கே நிற்பதாக நினைத்த கவின், தங்களின் காதல் விஷயத்தில் தலையிட சேரன் யார் என்று லாஸ்லியாவிடம் கேட்டு பிரிவை ஏற்படுத்தினார்.

கடும் விமர்சனம்
பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போது, கவின் - லாஸ்லியா காதலுக்கு அறிவுரை கூறினார் சேரன். அந்தச் சமயத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த லாஸ்லியாவின் அப்பாவும், மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இது சேரனின் தூண்டுதல் என்று எண்ணிய கவின் மற்றும் லாஸ்லியாவின் ரசிகர்கள், சேரனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

வெளிப்படையாக
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்துவிட்டபோதும் கவின் மற்றும் லாஸ்லியா ஆர்மியினர் சேரனை வச்சு செய்து வருகின்றனர். மிகவும் தரக்குறைவான மற்றும் இழிவான வார்த்தைகளால் அவரை விமர்சித்து வருகின்றனர். இதனால் நொந்து போன சேரன், இன்று அதுகுறித்து வெளிப்படையாகவே பேசிவிட்டார்.

இப்போது வேண்டாம்
இதுதொடர்பாக டிவிட்டிய அவர் நான் எவ்வளவோ பேசி பழக முயன்றும் என்னோடு கவின் பேச விரும்பவில்லை புறக்கணித்தார் என்பதே உண்மை. நீங்களும் பார்த்திருப்பீர்கள். இருந்தும் பிரச்சனை பெரிதாகாமல் இருக்க அவருக்கு எடுத்துச்சொன்னேன். இப்போது வேண்டாம் என்றுதான் சொன்னேன்.

நாக்கில் வராது
கவின் லாஸ்லியா விசயத்தில் அவர்கள் முடிவுக்கோ வாழ்வுக்கோ நான் குறுக்கே நிற்க போவதில்லை. அவசியமுமில்லை. இனியொரு முறை என் நாவில் இருவர் பெயரும் வராது. இத்தோடு நீங்கள் அனைவரும் நாகரீகம் கருதி நிறுத்திக்கொண்டால் நல்லது. என் பிரச்சனைக்கு வரவேண்டாம் என டிவிட்டியுள்ளார்.

ஆட்களை செட் செய்து
அவரது டிவிட்டை பார்த்த ரசிகர்கள் நீங்கள் விளக்கம் கொடுக்கும் அளவுக்கு அவர்கள் ஒன்றும் பெரிய ஆட்கள் இல்லை என தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கவின், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது பணம் கொடுத்துதான் ஓட்டு போட சொன்னார் என்ற பேச்சுகள் எழுந்தன. அதேபோல் சமூக வலைதளங்களிலும் ஆட்களை செட் செய்தே சேரனை கவின் தரப்பு விமர்சிப்பதாகவும் கூறப்பட்டது.

கண்டிப்பார்களா?
சேரனை தங்களின் ஆர்மியினர் இவ்வளவு தரக்குறைவாக விமர்சித்த போதும் கவினும் லாஸ்லியாவும் இதுவரை அதுகுறித்து வாய்திறக்கவில்லை. தங்களின் ரசிகர்களை கண்டிக்கவும் இல்லை. சேரன் தற்போது நொந்து போய் டிவிட்டியிருக்கிறார். இதனை பார்த்தாவது கவினும் லாஸ்லியாவும் தங்களின் ரசிகர்களை கண்டிப்பார்களா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications











