அனுஷ்கா இல்லை வாரிசு நடிகையை தான் காதலிக்கிறாரா பிரபாஸ்?
ஹைதராபாத்: பிரபாஸ் வாரிசு நடிகையை காதலிப்பதாக பேசப்படுகிறது.
பாகுபலி 2 படத்தை அடுத்து பிரபாஸ் நடித்துள்ள சாஹோ படம் வரும் 30ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் நடித்தபோது பிரபாஸ், பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சாஹோ ரிலீஸான பிறகு பிரபாஸுக்கு அமெரிக்க தொழில் அதிபரின் மகளுடன் கல்யாணம் என்று தகவல் வெளியானது.

பிரபாஸ்
என்ன பிரபாஸ், அமெரிக்க தொழில் அதிபரின் மகளை திருமணம் செய்யப் போகிறீர்களா என்று கேட்டதற்கு இல்லை என்றார். அப்படி என்றால் யாரையாவது காதலிக்கிறீர்களா என்று கேட்டதற்கு இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். அவரின் பதிலை பார்த்தவர்கள் பிரபாஸ் ஷ்ரத்தா கபூரை காதலிப்பதாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டனர்.

ஷ்ரத்தா
என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா என்று பிரபாஸ் கேட்டால் என்ன செய்வீர்கள் என்று ஷ்ரத்தா கபூரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, நிறைய உணவு கொண்டு வருமாறு கூறுவேன் என்று தெரிவித்துள்ளார்.(ஆக, சோறு தான் முக்கியம்). சாஹோ படத்தில் நடித்த போது பிரபாஸ் ஆந்திரா ஸ்பெஷல் உணவு வகைகளை வரவழைத்து ஷ்ரத்தாவுக்கு அடிக்கடி விருந்து கொடுத்துள்ளார்.

விருந்து
சாஹோ படத்தில் நடித்தபோது சுவையான உணவு வகைகளை சாப்பிட்டதாக தெரிவித்துள்ளார் ஷ்ரத்தா. ஷ்ரத்தா வேறு ஒருவரை காதலிப்பதாக பேசப்பட்ட நிலையில் தற்போது அவரின் பெயர் பிரபாஸுடன் சேர்ந்து அடிபடுகிறது. பிரபாஸும் சூசகமாக பதில் அளித்துள்ளதால் ஏதேதோ பேச்சுக்கள் கிளம்பியுள்ளது.

அனுஷ்கா
பிரபாஸ் ஷ்ரத்தாவை காதலிக்கிறார் என்று பரவிய தகவலால் அனுஷ்கா ரசிகர்கள் தான் பாவம் கவலை அடைந்துள்ளனர். பிரபாஸுக்கு ஏற்ற ஜோடி என்றால் அது அனுஷ்கா தான். படங்களில் சேர்ந்து நடித்தால் மட்டும் போதாது நிஜத்திலும் பிரபாஸ், அனுஷ்கா சேர வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுவது போன்று இல்லை. பாகுபலி பட விளம்பர நிகழ்ச்சிகளில் பிரபாஸ் அனுஷ்காவை எப்படி பாசத்துடன் பார்த்தாரோ அதே போன்று தற்போது சாஹோ நிகழ்ச்சிகளில் ஷ்ரத்தாவையும் பார்த்துள்ளார். அது தான் அனுஷ்கா ரசிகர்களின் கவலைக்கு முக்கிய காரணம்.


Click it and Unblock the Notifications











