twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பார்ட் பார்ட்டா படம் எடுத்தும் பெரிய வெற்றி கிடைக்கலையே!

    |

    சென்னை: ஹாலிவுட், பாலிவுட் தொடங்கி தற்போது கோலிவுட்டிலும் பார்ட் 2 படங்கள் அதிக அளவில் வெளியாகி வருகின்றன.

    ஏற்கனவே வெற்றியடைந்த ஒரு படத்தின் தொடர்ச்சி எனும்போது, ரசிகர்களிடையே அது சற்று அதிக எதிர்பார்ப்பை உருவாக்கும். ஆனால் எதிர்பார்ப்பு மட்டுமே படத்திற்கு வெற்றி தராது. அதே போல் அந்த எதிர்பார்ப்பு பொய்யாகும்போது அதுவே தோல்விக்கு காரணமாக அமைந்து விடுகின்றன. தமிழில் ஒரு படம் வெற்றியடைந்தால் அதே கருவில் அடுத்தடுத்து பல படங்கள் வருவது காலங்காலமாக நடந்து வரும் ஒன்று. அந்த வகையில் தமிழில் இப்போது பார்ட் 2 ட்ரெண்ட் போல. முனி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமான காஞ்சனா வும் வெற்றி பெற்றது.ஆனால் அதற்கடுத்து வெற்றி பெற்ற இரண்டாம் பாகத்தை கண்டுபிடிப்பது கடினம். இருப்பினும் பார்ட் 2 படங்களுக்கான மவுசு குறையவில்லை.

    Are Sequential films success in Tamil

    பொள்ளாச்சி கொடூரம்.. மூதேவி நீயெல்லாம் ஒரு தாயா..? ஆவேசமான அறந்தாங்கி நிஷா! பொள்ளாச்சி கொடூரம்.. மூதேவி நீயெல்லாம் ஒரு தாயா..? ஆவேசமான அறந்தாங்கி நிஷா!

    கடந்த 218-ல் தன அதிக அளவில் பார்ட் 2 படங்கள் வெளியாகின.2.0, விஸ்வரூபம் 2, மாரி 2, கலகலப்பு 2, தமிழ்ப்படம் 2, சண்டக்கோழி 2, சாமி ஸ்கொயர் என ஏகப்பட்ட படங்கள். இவற்றில் சாமி சண்டக்கோழி படங்கள் வெளியாகி 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகின்றன. இவை அனைத்துமே முதல் பாகத்தை ஒப்பிடும்போது குறைந்த அளவிலான வரவேற்பையே பெற்றுள்ளன.

    Are Sequential films success in Tamil

    இதுபோக அடுத்து தேவி 2, சதுரங்க வேட்டை 2 உள்ளிட்ட படங்கள் வெளியாகவுள்ள. இதுபோக புதுப்பேட்டை 2, ஆயிரத்தில் ஒருவன் 2, கொடி 2, நாடோடிகள் 2, மங்காத்தா 2, துப்பாக்கி 2 என பல படங்களின் இரண்டாம் பாகம் குறித்த பேச்சுகளை அந்தந்த படங்களின் இயக்குனர்கள் அவ்வப்போது பேசுகின்றனர். இது அனைத்தும் சாத்தியமா என்பது பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும் .

    Are Sequential films success in Tamil

    ஹாலிவுட்டில் 6,7 பக்கங்கள் வெற்றிகரமாக எடுக்கும்போது நம்ம ஊரில் 2-ம் பாகத்திற்கே பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. பாகுபலி , வடசென்னை போன்ற படங்களின் கதையை 2 மணி நேரத்திற்குள் சுருக்க முடியாது என படம் வெளியாகும் ஆரம்பிக்கும்போதே ஒன்றிற்கும் மேற்பட்ட பாகங்கள் வெளியாகும் என இயக்குனர்கள் தெரிவித்திருந்தனர். எனவே, கதை அமைப்பிறகு தேவை இல்லாத பட்சத்தில், முதல் பாகத்தின் வெற்றியை மட்டும் கருத்தில் கொண்டு, அதே போன்று இரண்டாம் பாகம் எடுக்க நினைத்தால் அது முதல் படத்தையும் சேர்த்தே பாதிக்கும் என்பது 2018-ல் வெளியான பார்ட் 2 படங்களின் நிலையை பார்த்தாலே தெரிகிறது .

    English summary
    A big question arises are sequential films successful in Tamil or not.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X