சொல்லவே இல்லை.. பிக்பாஸ்-க்கு வரப்போறீங்களாமே? தாராள நடிகையிடம் ஏராளமாகக் கேள்வி கேட்கும் ஃபேன்ஸ்!
சென்னை: பிரபல நடிகை பிக்பாஸில் கலந்துகொள்ள இருப்பதாக வந்த தகவலை அடுத்து ரசிகர்கள் கேள்வி கேட்டுள்ளனர்.
Recommended Video
லாக்டவுனால், சோசியல் மீடியாவில் நேரத்தை செலவிடும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்கிறது ஒரு புள்ளி விவரம்.
தங்கள், முன்னாள், இந்நாள் போட்டோக்களை பதிவு செய்து அதற்கு அட்டகாசமான கேப்ஷன்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக செய்து வருகின்றனர்.

முன்னாள் ஹீரோயின்ஸ்
நடிகைகளின் இந்த போட்டோக்களுக்கு ஏராளமான ரசிகர்கள் லைக்ஸ்களையும் கமென்ட்களையும் அள்ளிக் குவிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இப்போதைய இளம் ஹீரோயின்களுக்கு இணையாக, முன்னாள் ஹீரோயின்களும் தங்களது பிகினி மற்றும் கிளாமர் புகைப்படங்களை வெளியிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதில் ஒருவர் நடிகை கிரண்.

வின்னர், ஜெமினி
எப்போதாவது புகைப்படங்களை பதிவு செய்துகொண்டிருந்த கிரண், இப்போது ரசிகர்களின் அன்புத் தொல்லைக்கு ஆளாகி விட்டதால் தினமும் ஒரு போட்டோவையாவது பதிவு செய்து விடுகிறார். இதற்கு இன்னும் வின்னரையும் ஜெமினியையும் மறக்காத ஏராளமான ரசிகர்கள் விழுந்து எழுந்து கமென்ட் போடுகின்றனர். லைக்ஸ்களுக்கும் பஞ்சமே இல்லை.

அழகான விஷயங்கள்
இப்போது ஜிகு ஜிகு மேக்கப்புடன் நடிகை கிரண், தான் எடுத்துள்ள கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார் இதற்கு ரசிகர்கள் ஆசை ஆசையாகக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். அவர் அழகை ஆஹோ, ஓஹோவென புகழ்ந்து தள்ளியுள்ளனர். இந்த போட்டோக்களுக்கு கேப்ஷனாக, அழகான விஷயங்கள் கவனத்தைக் கேட்பதில்லை என்று கூறியிருக்கிறார்.

பிக்பாஸ்ல வர்றீங்களாமே?
ஒருவர், எங்க கவனம் எல்லாம் உங்க மேலதான் என்று தெரிவித்துள்ளார். இன்னொருவர், 'என்ன கிரண் தமிழ் பிக்பாஸ்ல வர்றீங்களாமே?, சொல்லவே இல்லை' என்று கேட்டுள்ளார். சிலர், உங்களை பார்த்த பிறகுதான் வயசுங்கறது ஒரு நம்பர்னு தெரியுது' என்று கூறியிருக்கிறார். சிலர், தமிழ் சினிமால உங்களைப் பார்க்க ஆசையாக இருக்கு. சீக்கிரம் வாங்க என்று அழைத்துள்ளனர்.

நெட்டிசன்ஸ் கோரிக்கை
அப்படியே பிகினி போட்டோ போஸ்ட் பண்ணுங்களேன் என்று சில நெட்டிசன்ஸ் கோரிக்கை வைத்துள்ளனர். சன் டிவியில இப்ப வின்னர் ஓடிட்டு இருக்கு, பாருங்க கிரண் என்று ஒருவர் கூறியுள்ளார். அப்ப இருந்ததை விட இப்ப செமயா இருக்கீங்க என்று சிலர் ஓவராக வழிந்துள்ளனர். நடிகை கிரணின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கேரக்டர் ரோலில்
நடிகை கிரண், ஜெமினி படம் மூலம் ஹீரோயின் ஆனவர். அஜித்தின் வில்லன், கமலின் அன்பே சிவம், சரத்குமாரின் திவான், பிரஷாந்த் நடித்த வின்னர் உள்பட பல படங்களில் நடித்தார். இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளிலும் நடித்து வந்த இவர், இப்போது கேரக்டர் ரோலில் நடித்து வருகிறார். சந்தானத்தின் சர்வர் சுந்தரம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.


Click it and Unblock the Notifications











