உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா சாண்டி.. தோனி கேட்ட கேள்வி.. 2 விரலை காட்டியதும் அதிர்ந்த அரங்கம்!
சென்னை: கிரிக்கெட் வீரர் தோனி அடுத்ததாக சினிமா தயாரிப்பில் களமிறங்கி உள்ளார். தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தைத் தொடங்கி முதன் முதலாக ஹரிஷ் கல்யாண், இவானா நடிக்கும் தமிழ் படத்தை தயாரித்துள்ளார்.
அந்த படத்தில் சாண்டி மாஸ்டரும் முக்கிய ரோலில் நடித்துள்ளார். ஜூலை 10ம் தேதி சென்னையில் உள்ள லீலா பேலஸில் நடைபெற்ற எல்ஜிஎம் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கோட் சூட் போட்டு சும்மா கெத்தாக தோனி வந்திருந்தார்.

நிகழ்ச்சியில் தோனி மேடை ஏறி பேசும் போது சாண்டி மாஸ்டரை பார்த்து உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா என கேட்டதும், சாண்டி 2 விரலை காட்ட இருமுறை திருமணம் ஆகிடுச்சு என அரங்கில் இருந்தவர்களே சொல்லி அதிர வைத்து விட்டனர்.
தோனி படம்: இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, சாண்டி மாஸ்டர், வினோதினி, விடிவி கணேஷ், ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள எல்ஜிஎம் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை நேற்று வெளியானது.
இந்த படத்தை தோனி மற்றும் சாக்ஷி தோனி இணைந்து தயாரித்துள்ளனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தோனி மேடை ஏறி பேசும் போது படம் பற்றியும் படத்தில் நடித்தவர்கள் குறித்தும் செம க்யூட்டாக பேசினார்.

சாண்டி மாஸ்டருக்கு கல்யாணம் ஆகிடுச்சா: திருமண பந்தத்தில் இணையும் ஆண்கள் எப்படி அம்மாவையும் மனைவியையும் சமாளிப்பது என்கிற யூனிவர்ஸல் பிரச்சனையைத் தான் இந்த படம் மையக்கருவாக கொண்டுள்ளது என பேசிய தோனி, சாண்டி மாஸ்டரை பார்த்து உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா? எனக் கேட்டார்.
தனக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர் என்பதை சொல்வதற்காக 2 விரலை காட்டி இரு குழந்தைகள் உள்ளனர் சார் என சாண்டி சொல்ல வருவதற்கு முன்னரே அரங்கமே சிரித்து கதையை மாற்றி விட்டனர்.
இரண்டு கல்யாணம்: நடிகை காஜல் பசுபதியை திருமணம் செய்த சாண்டி மாஸ்டர் அவரை விவாகரத்து செய்து பிரிந்த நிலையில், அடுத்ததாக 2017ம் ஆண்டு டாரத்தி சில்வியா என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.
சாண்டி மாஸ்டருக்கு ஒரு பெண் குழந்தை மற்றும் ஆண் குழந்தை உள்ளனர். தோனி கேட்ட கேள்விக்கு சாண்டி பதில் சொல்ல வருவதற்கு முன் அரங்கில் இருந்தவர்களே இரண்டு கல்யாணம் ஆகிடுச்சு என சொன்னதுமே, யோவ் சும்மா இருங்கய்யா என சிரித்து விட்டு சாண்டி சமாளிக்க அரங்கமே சிரிப்பொலியில் அதிர்ந்தது.

கெட்டவன் சிம்பு கெட்டப்பில்: இந்த படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் சாண்டி மாஸ்டர் நடித்துள்ளார். மேலும், பாகுபலி படத்துக்காக மதன் கார்கி உருவாக்கிய கிளிக்கி மொழியில் உருவான ஒரு பாடலுக்கும் இந்த படத்தில் சாண்டி மாஸ்டர் நடனமாடி உள்ளார்.
அவரது கெட்டப்பை பார்த்த ரசிகர்கள் கெட்டவன் படத்துக்கு சிம்பு போட்ட கெட்டப் போலவே இருக்கு சாண்டி மாஸ்டர் சூப்பர் என கமெண்ட் போட்டு வருகின்றனர். விரைவில் எல்ஜிஎம் திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications