சவக்குழியில் இருந்து மீண்டு அர்ஜென்டினா வெற்றி.. மலையாள நடிகரின் வெறித்தனமான கொண்டாட்டம்
சென்னை: ஃபிஃபா உலக கோப்பை 2026 கால் இறுதியை எட்டிவிட்டது. களமிறங்கிய 48 அணிகளில் 8 அணிகள் தற்போது கால் இறுதியை எட்டி உள்ளது. கால்பந்து உலகில் ஜாம்பவான்களாக ஜொலித்த குரோஷியாவின் லூகா மோட்ரிச், பிரேசிலின் நெய்மர், போர்ச்சுக்கலின் ரொனால்டோ என இவர்கள் மூவரும் அடுத்தடுத்த நாட்களில் தோல்விகளை சந்தித்து கண்ணீருடன் வெளியேறினர். மேலும் இந்த உலகக் கோப்பையுடன் சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வும் பெறுகிறார்கள்.
இப்படி இருக்கையில் இந்த வரிசையில் மற்றொரு ஜாம்பவானும் நடப்பு உலக சாம்பியன் அணியின் கேப்டனுமான அர்ஜெண்டினாவின் மெஸ்ஸியும் இணைந்து விட்டார் என்று மெஸ்ஸி ஹேட்டர்ஸ் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்தார். அதன்படி, ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் அர்ஜென்டினா அணி எகிப்து அணியை எதிர்கொண்டது. இந்த போட்டி சவாலானதாக இருந்தாலும் அர்ஜெண்டினா வெல்லும் என்று பலரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்தனர். ஆனால் மெஸ்ஸி ஹேட்டர்ஸ் எல்லாம் ஆசைப்பட்டது போல, போட்டியின் 78வது நிமிடம் வரை எகிப்து அணியின் ஆதிக்கம் தான் இருந்தது. ஃப்ரீ கிக், கார்னர் கிக் என அர்ஜென்டினாவுக்கு கிடைத்த எல்லா வாய்ப்புகளையும் எகிப்து வீரர்கள் நெருப்பைப் போல தடுத்துக் கொண்டு இருந்தார்கள்.
சரி, மோட்ரிச், நெய்மர் மற்றும் ரொனால்டோவுக்கு பக்கத்தில் மெஸ்ஸிக்கும் ஒரு சேர் போட வேண்டியதுதான் போல என்று எல்லோரும் நினைத்துக் கொண்டு இருந்தார்கள் என்று கூறலாம். போட்டி நடைபெற்ற அட்லாண்டா மைதானத்தில் இருந்த எகிப்து அணி ரசிகர்கள் அரங்கமே அதிரும் அளவுக்கு ஆர்ப்பரித்து வெற்றியைக் கொண்டாட காத்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால் 79ஆவது நிமிடத்தில் ரொமாரியோ அடித்த ஹெட்டர் ஷாட் அர்ஜென்டினாவுக்கு முதல் கோலைப் பெற்றுக் கொடுத்தது.

சரியான கம்-பேக்: இந்த போட்டியில் உயிர் இருக்கிறது என்று அப்போதுதான் அர்ஜென்டினா ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 83வது நிமிடத்தில் மிகவும் நெருக்கடியான சூழலில் வேகமாக அணியின் இரண்டாவது கோலை அடித்து அசத்தினார் மெஸ்ஸி. இந்த கோல் அடித்து முடித்த அடுத்த நொடி மைதானத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் போட்டியைப் பார்த்துக் கொண்டு இருந்த அர்ஜென்டினா ரசிகர்கள் ஆரவாரத்தில் துள்ளிக் குதித்தனர்.
அர்ஜென்டினா வெற்றி: கிட்டத்தட்ட உலகக் கோப்பையை வென்றது போன்ற ஆரவாரத்தில் மெஸ்ஸியே ஈடுபட்டார். கோல் அடித்து முடித்துவிட்டு ஆக்ரோசமாக ஓடிய மெஸ்ஸி எமோஷனல் ஆனது எல்லாம் தனி கதை. அதன் பின்னர் கொடுக்கப்பட்ட 7 நிமிட இஞ்சுரி டைமில் மூன்றாவது கோலை அர்ஜென்டினாவுக்காக அடித்தார் ஃபெர்னாண்டஸ். அவ்வளவுதான் போட்டியை 3-2 என்ற கணக்கில் வென்று கால் இறுதிக்கு முன்னேறியது அர்ஜென்டினா.

மலையாள நடிகர்: தற்போது இணையத்திற்குள் நுழைந்தாலே அர்ஜெண்டினா ரசிகர்களும் மெஸ்ஸி ரசிகர்களும் இந்த வெற்றியைக் கொண்டாடியது தொடர்பான வீடியோக்கள் தான் நிரம்பி வழிகிறது. அந்த வகையில் மலையாள நடிகரான ஐ.எம். விஜயன் ஆட்டம் போட்டு, ஆக்ரோஷமான கத்தி, துள்ளிக் குதித்து அர்ஜெண்டினாவின் வெற்றியைக் கொண்டாடி உள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications