ரணகளமான பிக் பாஸ் வீடு..டென்ஷனான ஆரி.. இன்னைக்கு தரமான சம்பவம் இருக்கு.!

சென்னை : அரச குடும்பமா அரக்க குடும்பமா என்கிற டாஸ்க்கில் ஹவுஸ் மேட்ஸ்கள் 2 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு இருந்தனர்.

இதில் நேற்று ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் அசுர குடும்பம் மாஸ் காட்டி இருந்தாலும் அரச குடும்பம் மக்களின் மனங்களை வென்றது.

இந்த நிலையில் இன்று அது அப்படியே உல்டாவாக மாறி அரச குடும்பம் அரக்க குடும்பமாகவும் அரக்க குடும்பம் அரச குடும்பமாகவும் மாறியிருக்கும் டாஸ்க்கில், பாலாஜியின் செயலால் ஆரி கடுப்பாகி உள்ளார்.

அதிரடியான போட்டி

அதிரடியான போட்டி

அரச குடும்பம் அரக்க குடும்பம் என இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு நாடா இல்லை காடா என இரண்டு குழுக்களுக்கும் அதிரடியான போட்டி நேற்று வைக்கப்பட்டது.

அரக்க குடும்பமாக

அரக்க குடும்பமாக

இதன் முதல் பகுதியில் சுரேஷ் சக்கரவர்த்தி, கேப்ரில்லா, ஆரி உள்ளிட்டோர் அரக்க குடும்பமாக மாறி அனைவரையும் மிரட்டி பிக் பாஸ் இல்லத்தை குதூகலமாக்கினர்.

நாட்டைக் காப்பாற்ற

நாட்டைக் காப்பாற்ற

இதில் அரச குடும்பமாக ரியோ, பாலாஜி முருகதாஸ், சனம் ஷெட்டி, அறந்தாங்கி நிஷா, அனிதா, ரம்யா என பலர் தங்களது நாட்டை காப்பாற்ற விளையாடினார். இதில், சனம் ஷெட்டி திறமையாக விளையாடினார்.

அப்படியே உல்டாவாக

அப்படியே உல்டாவாக

இவ்வாறு விறுவிறுப்பாக சென்ற இந்த அரச குடும்பமாக அரக்க குடும்பமா முதல் பகுதியின் கடைசியில் அரச குடும்பம் வெல்ல இன்று இரண்டாம் பகுதி அப்படியே உல்டாவாக மாற்றப்பட்டு அரச குடும்பம் அரக்க குடும்பமாகவும் அரக்க குடும்பம் அரச குடும்பமாகவும் டாஸ்க்கில் மாற்றியமைக்கப்பட்டது.

அரச குடும்பமாகமாறி

அரச குடும்பமாகமாறி

அதன்படி இப்போது அரக்க குடும்பமாக இருந்த ஆரி, சுரேஷ் சக்கரவர்த்தி, கேப்ரில்லா, ஆஜித் குழு இன்று அரச குடும்பமாகமாறி உள்ளது.

விதிமுறைகளை மீறி

விதிமுறைகளை மீறி

அதில் அரசனாக பதவியேற்ற நடிகர் ஆரி நாட்டை காப்பாற்ற எதிரிகளான அரக்க கூட்டத்தை எதிர்கொள்ளும் போது அதில் அரக்க கூட்டத்தில் இருக்கும் பாலாஜி பிக் பாஸ் விதிமுறைகளை மீறி நடந்து கொண்டது ஹவுஸ் மேட்ஸ்களை மட்டுமல்லாமல் ரசிகர்களிடையேயும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆரஞ்சு பழத்தின் தோலை

ஆரஞ்சு பழத்தின் தோலை

அரச குடும்பத்தின் அரசனாக முடி சூடியுள்ள ஆரியின் பொறுமையை சோதித்த அரக்க குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒருகட்டத்தில் கடினமான செயல்களை செய்ய அதில் ஒன்றாக ஆரஞ்சு பழத்தின் தோலை ஆரியின் கண்களில் பிழிந்து விட பொறுமை இழந்த ஆரிக்கும் பாலாஜி முருகதாஸுக்கும் வாக்குவாதம் முட்டிக்கொள்கிறது

தரமான சம்பவம் இருக்கு

தரமான சம்பவம் இருக்கு

இந்நிலையில் கடுப்பான ஆரி, பாலாஜியிடம் சண்டையிட்டவாறு "இந்த விளையாட்ட விளையாடுறதுக்கு நீங்க வேற எதவது செய்யலாம்" எனக் கூற இப்போது அது ஹவுஸ் மேட்ஸ்களை அப்செட் ஆக்கியுள்ளது. இதைப்பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள் நமத்து போன பட்டாசையே(ஆரி) வெடிக்க வைக்கிற மாதிரி பண்ணிட்டியே பிக் பாஸ். வேற லெவல் என குதூகலமாக கூறி வருகின்றனர். இருக்கு இன்னைக்கு தரமான சம்பவம் இருக்கு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X