அரிமா நம்பி இன்று 400 திரையரங்கில் ரிலீஸ்: விக்ரம் பிரபுவுக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைக்குமா?
விக்ரம் பிரபு நடித்த அரிமா நம்பி திரைப்படம் இன்று 400 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
கூலிக்காரன்', 'காக்க காக்க', 'கந்தசாமி', 'துப்பாக்கி' உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு, விக்ரம் பிரபுவை வைத்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் 'அரிமாநம்பி'.
இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாசிடம் உதவி இயக்குரனாக பணிபுரிந்த ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார். டிரம்ஸ் சிவமணி இப்படத்தின் மூலம் இசையமைப்பாளாராக அறிமுகமாகியுள்ளார்.

டிரைலர் பாடலுக்கு வரவேற்பு
இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ளது.

400 திரையரங்குகளில்
ஆக்ஷன், திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் விக்ரம் பிரபு நகரத்தில் வசிக்கும் இளைஞராக நடித்துள்ளார். இந்தப் படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 400 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

வடசென்னையில் பரபரப்பு
இப்படத்தில் இடம்பெறும் சண்டைக்காட்சிக்காக விக்ரம் பிரபுவை வடசென்னை முழுவதும் ஓடவிட்டு படமாக்கியுள்ளனர். அதேபோல், பாங்காக்கில் மலைப்பகுதியில் இதுவரை சினிமாவில் யாரும் படம்பிடிக்காத அருவியொன்றில் பாடல் காட்சி ஒன்றை படமாக்கியுள்ளனராம்.

படக்குழுவினருக்கு பாராட்டு
இப்படத்திற்கு ‘யு' சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழுவினர், அனைவரும் ரசித்து பார்க்கக்கூடிய படமாக எடுத்ததற்கு படக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

ஹாட்ரிக் வெற்றி கிடைக்குமா
கும்கி, இவன் வேறமாதிரி படங்களுக்குப் பின்னர் விக்ரம் பிரபு நடித்து வெளியாகியுள்ள மூன்றாவது திரைப்படம் இது. பெரும் எதிர்பார்ப்பிற்கிடையே வெளியாகியுள்ள இப்படத்தை சினிமா ரசிகர்கள் வெற்றிபெற வைப்பார்களா? விக்ரம் பிரபு ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா?


Click it and Unblock the Notifications











