தளபதி 65 ஓப்பனிங் பாடலை பாடப் போறது இவர்தானா? மீண்டும் அனிருத் உடன் இணைந்த என்ஜாமி பிரபலம்!
சென்னை: எஞ்சாயி என்ஜாமி பாடலில் தீயுடன் இணைந்து அறிவு பாடிய பாடல் சர்வதேச அளவில் ஹிட் அடித்து வருகிறது.
சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் தமிழில் இப்படியொரு ஆல்பம் பாடலா என பலரும் பாராட்டி வருகின்றனர்.
மாஸ்டர் படத்தில் வாத்தி ரெய்டு பாடலை பாடிய அறிவு மீண்டும் அனிருத் உடன் இணைந்துள்ளார்.

தெருக்குரல் அறிவு
காலா படத்தின் உரிமையை மீட்போம் பாடலை எழுதிய தெருக்குரல் அறிவு, பா. ரஞ்சித்தின் கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் குழுவில் பாடகராக இணைந்தார். வட சென்னை படத்தின் மத்திய சிறையிலே பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பாடகராகவும் அறிமுகமானார் தெருக்குரல் அறிவு. இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, பட்டாஸ், டகால்டி, ஜிப்ஸி உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களுக்கு பாடல் எழுதி பாடியுள்ளார்.

எஞ்சாயி என்ஜாமி
வெளியான ஒரே வாரத்தில் 40 மில்லியனை நெருங்கியுள்ளது தீ மற்றும் அறிவு பாடியுள்ள எஞ்சாயி என்ஜாமி ராப் பாடல். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் இந்த பாடல் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. மாஸ்டர் வாத்தி ரெய்டு பாடலுக்கு பிறகு அறிவுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு இந்த பாடல்.

இன்னொருவாட்டி
ராக்ஸ்டார் அனிருத் இசையில் மீண்டும் பாடல் எழுதி பாட உள்ளேன் என தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அனிருத் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார் அறிவு. இருவரும் மீண்டும் இணைந்துள்ள நிலையில், எந்த பாடலுக்கு என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தளபதி 65 இன்ட்ரோ பாடல்
கோலிவுட்டில் ஏகப்பட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார் அனிருத். ஆனால், இன்னொருவாட்டி என்பதில் 'வாத்தி'யை குறிப்பிட்டு அறிவு ட்வீட் போட்டிருப்பதன் மூலம் தளபதி 65 படத்திற்கு தான் ஓப்பனிங் பாடலை அனிருத் இசையில் பாட உள்ளார் என்பது தெரிகிறது. என்ஜாயி எஞ்சாமி ஹிட்டுக்கு பிறகு தளபதி 65 படத்திற்கு பாட அறிவை அனிருத் அழைத்துள்ளார் என்றே தெரிகிறது. வெயிட் பண்ணி பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











