Don't Miss!
- News
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்! கனிமொழி தந்த ஊக்கம்! நெகிழ்ந்து போன மாற்றுத்திறனாளி மாணவி!
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Sports
இந்தியா வெல்ல சூர்யகுமார் அதை செய்யனும்.. வாசிங்டன் சுந்தர் அதிரடிக்கு காரணம் -தினேஷ் கார்த்திக்
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
திடீரென டிவிட்டரில் ட்ரென்ட்டான அறிவு.. யாரு.. என்ன காரணமுன்னு தெரியுமா?!
Recommended Video
சென்னை: சூரரைப் போற்று படத்தின் மாறா தீம் மியூசிக் டிவிட்டரில் ட்ரென்ட்டாகி வரும் நிலையில் அறிவு என்ற ஹேஷ்டேகும் ட்ரென்ட்டாகி வருகிறது.
காப்பான் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் சூரரைப்போற்று. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியானது.

தீம் மியூஸிக்
படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் எப்போது ரிலீஸாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் டீசருக்காக ஸ்பெஷல் தீம் மியூசிக் ஒன்றை உருவாக்கி வருவதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்திருந்தார்.
|
சூர்யா பாடியிருக்கிறார்
இந்நிலையில் தீம் மியூஸிக் குறித்த தகவல் ஒன்றை தனது டிவிட்டிர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அதாவது மாறா தீம் மியூசிக்குக்கான ரேப் பாடலை நடிகர் சூர்யா தனது சொந்தக் குரலில் பாடியிருப்பதாகவும், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றையும் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
|
ட்ரென்டிங்
மேலும் இந்த ரேப் பாடலை பாடலாசிரியர் அறிவு எழுதியிருக்கிறார். இவர் ஏற்கனவே ரஜினி நடித்த காலா படத்தில் ஒரு பாடலை எழுதியிருக்கிறார். மாறா தீம் மியூஸிக் குறித்த தகவலை தொடர்ந்து #MaaraTheme, #Arivu என்ற ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரென்டிங்கில் உள்ளன.
|
இதயங்களை தூண்டும்
மாறா தீம் பாடலாசிரியர் அறிவு நிச்சயமாக அனல் பறக்கும் பாடலைதான் இசையமைப்பாளருக்கு கொடுத்திருப்பார். நிச்சயமாக இந்த பீட்ஸ் உங்கள் இதயங்களை தூண்டும்.. என்று தெரிவித்திருக்கிறார் இவர்.