தெருக்குரல் அறிவு, யுவனின் கூட்டணியில் … ‘Dont Touch Me’ பாடல் ரிலீஸ் !
சென்னை : தெருக்குரல் அறிவு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் கூட்டணியில் உருவான 'Dont Touch Me' பாடல் இன்று வெளியாகி உள்ளது.
இந்தப் பாடலை யுவன் சங்கர் ராஜா, தனது யு1 ரெக்கார்ட்ஸ் மூலமாகத் தயாரித்துள்ளார்.
இணையத்தில் வெளியாகி உள்ள இந்த பாடல் அனைவரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
விருப்பப்பாடல்
சந்தோஷ் நாராயணன் இசையில் தீ, அறிவு இருவரும் இணைந்து பாடிய எஞ்சாய் எஞ்சாமி இணையத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்றது. இப்பாடலை தெருக்குரல் அறிவு எழுதி இருந்தார். சுயாதீனக் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் ஆரம்பித்துள்ள மாஜா தளம் இப்பாடலை தயாரித்தது. ஏப்ரல் மாதம் வெளியான இந்த பாடல் தற்போது வரை அனைவரின் விருப்பப்பாடலாகவே உள்ளது.

தயாரிப்பு
எஞ்சாய் எஞ்சாமி பாடலுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தெருக்குரல் அறிவு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் கூட்டணி அமைத்துள்ளார், 'Dont Touch Me' என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலை யுவன், தனது யு1 ரெக்கார்ட்ஸ் மூலமாகத் தயாரித்துள்ளார். இந்த நிலையில் 'Dont Touch Me' பாடல் இன்று வெளியாகி உள்ளது.

இசை
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு பாடலாக இப்பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை தெருக்குரல் அறிவு மற்றும் மலேசியப் பாடகி யுனோஹூ இணைந்து பாடி உள்ளனர். யுனோஹூ நேர்கொண்ட பார்வை படத்தில் வரும், காலம் என்ற பாடலை பாடியுள்ளார்.

ஏராளமான பார்வையாளர்கள்
'Dont Touch Me' பாடல் ஜூன்26ந் தேதி வெளியாகும் என்று யுவன் சங்கர் ராஜா ஏற்கனவே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இதையடுத்து, இன்று இந்த பாடல் இணையத்தில் வெளியாகி உள்ளது. இப்பாடல் வெளியான சிறிது நேரத்தில் ஏராளமான பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











