அறிவு என் நம்பரை பிளாக் பண்ணிட்டாருன்னு நினைக்கிறேன்.. திடீரென பகீர் கிளப்பிய சந்தோஷ் நாராயணன்!

சென்னை: என்ஜாய் எஞ்சாமி ஆல்பம் பாடல் ரிலீஸான நிலையில், தெருக்குரல் அறிவை சந்தோஷ் நாராயணன் மற்றும் அவரது மகள் பாடகி தீ புறக்கணித்து விட்டனர் என அறிவு கொந்தளித்து இருந்தார். பா. ரஞ்சித்தும் அறிவுக்கு ஆதரவாக சந்தோஷ் நாராயணனை பகைத்துக் கொண்டார். அட்டகத்தி முதல் இணைந்து பயணித்த நண்பர்கள் இந்த பிரச்சனை காரணமாக சார்பட்டா பரம்பரை படத்துக்கு பிறகு பிரிந்து விட்டனர்.

நட்சத்திரம் நகர்கிறது, தங்கலான் படங்களுக்கு வேறு வேறு இசையமைப்பாளர்களுடன் பா. ரஞ்சித் பணியாற்றி வருகிறார். ஆனால், சமீபத்தில் சந்தோஷ் நாராயணனுக்கும் பா. ரஞ்சித்துக்கும் இடையே பிரச்சனை தீர்ந்து விட்டது. "நீயே ஒளி" இசை நிகழ்ச்சியின் அறிவிப்பை பா. ரஞ்சித்தே ட்விட்டரில் வெளியிட்டு இருந்தார்.

Arivu blocked my number, I sent invite to him also - Santhosh Narayanan opens up

சந்தோஷ் நாராயணன் இசை நிகழ்ச்சி: பிரபல இசையமைப்பாளர்கள் தொடர்ந்து இசை நிகழ்ச்சிகளை நடத்தி ரசிகர்களையும் பணத்தையும் சம்பாதித்து வருகின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் சென்னையில் நடத்திய இசை நிகழ்ச்சி கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, அனிருத், விஜய் ஆண்டனி என பல இசையமைப்பாளர்கள் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். "நீயே ஒளி" எனும் தலைப்பில் சந்தோஷ் நாராயணன் இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளார்.

அறிவுக்கு இன்வைட் அனுப்பினேன்: பத்திரிகையாளர்களை அந்த இசை நிகழ்ச்சி தொடர்பாக சந்தோஷ் நாராயணன் சந்தித்தார். அப்போது தெருக்குரல் அறிவுக்கு அழைப்பு விடுத்தீர்களா என பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அறிவுக்கு இன்வைட் அனுப்பிட்டேன் என்றார்.

பிளாக் பண்ணியிருக்காரு: ஆனால், அவர் என் நம்பரை பிளாக் பண்ணியிருக்காருன்னு நினைக்கிறேன். எல்லாருக்கும் இன்விட்டேஷன் அனுப்பிட்டேன். யாரெல்லாம் வராங்கன்னு பார்ப்போம் என்றார். மேலும், பாடகி தீ மற்றும் அறிவு இணைந்து பாடுவார்களா? என்கிற கேள்விக்கும் அவர் பதில் அளித்துள்ளார்.

அறிவு பாடகி தீ இணைவார்களா?: என்ஜாய் எஞ்சாமி பாடல் பிரச்சனைக்கு பிறகு எங்களுக்கு ஒன்றுமில்லை. அந்த சைடுல இருந்தும் சீக்கிரம் சரியாகி விடும். அவர்கள் ரெண்டு பேரு பண்ண பாடல்களே நிறைய ரிலீஸ் பண்ண முடியாம இருக்கு என சந்தோஷ் நாராயணன் வெளிப்படையாக பேசியுள்ளார். தெருக்குரல் அறிவு சீக்கிரமே சந்தோஷ் நாராயணன் உடன் பேசி பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X