சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ரோலிங் ஸ்டோன்; அட்டை படத்தில் இடம்பெற்றார் அறிவு!

சென்னை: என்ஜாய் எஞ்சாமி பாடல் உலகம் முழுவதும் பிரபலமடைந்த நிலையில், ரோலிங் ஸ்டோன் இதழில் பாடகி தீ மற்றும் கனடா நாட்டை சேர்ந்த தமிழ் ராப் இசை பாடகர் ஷான் வின்சன்ட் டி பால் இருவரும் இணைந்திருக்கும் அட்டைப் படம் வெளியானது.

ஆனால், தெருக்குரல் அறிவு ஏன் ஓரங்கட்டப்பட்டார் என்கிற சர்ச்சை பூதாகரமாக வெடித்தது.

இயக்குநர் பா. ரஞ்சித் உள்ளிட்ட பலரும் தெருக்குரல் அறிவை புறக்கணிப்பது ஏன் என கேள்வி எழுப்பிய நிலையில், அடுத்த மாதம் வெளியாக உள்ள ரோலிங் ஸ்டோன் அட்டைப் படத்தை தனியாளாக அலங்கரித்து இருக்கிறார் அறிவு.

காலாவில் அறிமுகம்

காலாவில் அறிமுகம்

பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான காலா படத்தில் இடம் பெற்ற உரிமையை மீட்போம் பாடலை எழுதி திரைத்துறைக்குள் அறிமுகமானார் அறிவு. தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை படத்தில் இடம்பெற்ற மத்திய சிறையிலே பாடலை எழுதி அவர் பாட அது மிகவும் வைரலானது.

வாத்தி ரெய்டு

வாத்தி ரெய்டு

நட்பே துணை, பட்டாஸ், நாடோடிகள் 2, ஜிப்சி, டகால்டி, நான் சிரித்தால் என ஏகப்பட்ட படத்திற்கு தொடர்ந்து பாடல்களையும் எழுதியும் பாடியும் வந்தார். தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி ரெய்டு பாடல் தெருக்குரல் அறிவுக்கு மிகப்பெரிய ஹிட்டை கொடுத்தது.

என்ஜாய் எஞ்சாமி

என்ஜாய் எஞ்சாமி

அதனை தொடர்ந்து தனி ஆல்பமாக உருவான என்ஜாய் எஞ்சாமி பாடல் உலகளவில் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள டைம் சதுக்கத்தில் எல்லாம் இந்த பாடலின் விளம்பரம் ஒளிபரப்பானது.

ரோலிங் ஸ்டோன்

ரோலிங் ஸ்டோன்

இந்நிலையில், ஆகஸ்ட் மாத ரோலிங் ஸ்டோன் இதழ் அட்டைப் படத்தில் பாடகி தீ மற்றும் கனடா தமிழ் ராப்பரான ஷான் வின்சன்ட் டி பால் ஆகிய இருவரும் இடம்பெற்றிருந்தனர். பாடகி தீ மற்றும் என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என பாராட்டுக்கள் கிடைத்தன.

அறிவு மிஸ்சிங்

அறிவு மிஸ்சிங்

அதே சமயம் தெருக்குரல் அறிவை எங்கே காணவில்லை. அவர் மட்டும் ஏன் புறக்கணிக்கப்பட்டார் என்கிற குரலும் ஒலிக்க ஆரம்பித்தது. அந்த பாடல் ஹிட்டாக அத்தனை உழைப்பையும் போட்ட அறிவை மறைத்து விட்டது ஏன் இயக்குநர் பா. ரஞ்சித் உள்ளிட்ட பல பிரபலங்களும் கேள்வி எழுப்பினர்.

அட்டைப் படத்தில் அறிவு

அட்டைப் படத்தில் அறிவு

இந்த விவகாரம் பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், வரும் செப்டம்பர் மாத ரோலிங் ஸ்டோன் இதழில் அறிவு இருக்கும் அட்டை படத்தின் போஸ்டர் வெளியாகி சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது. அட்டகாசமான அட்டைப் படத்தில் அறிவை கண்ட பிரபலங்களும் ரசிகர்களும் அவரை கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X