twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இரண்டுமே உள்ள தலைவன்.. வெளியானது நம்பிக்கை ஆந்தம்.. டிரெண்டாகும் #கமலின்_அறிவும்அன்பும்!

    |

    சென்னை: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா குறித்த பல பாடல்கள் உருவாகி வந்த நிலையில், கமல்ஹாசனின் அறிவும் அன்பும் பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது.

    Recommended Video

    Exclusive : Bigg Boss 4 Contestants Revealed | Kamal Hassan

    உலக நாயகன் கமல்ஹாசன் வரிகளில் ஜிப்ரான் இசையில் உருவாகி உள்ள இந்த பாடலை இசையமைப்பாளர்கள் அனிருத், யுவன் சங்கர் ராஜா மற்றும் பாடகர்கள் சித் ஸ்ரீராம், ஸ்ருதி ஹாசன், ஆண்ட்ரியா, பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் மாஸ்டர் லிடியன் இணைந்து பாடியுள்ளனர்.

    அனைவரும் அவரவர் வீடுகளில் பாடி பதிவு செய்த வீடியோவை, கொரோனா பாதிப்பு மான்ட்டேஜ்களுடன் எடிட் செய்து ராஜ் கமல் ஃபிலிம்ஸ் திங்க் மியூசிக்கில் வெளியிட்டு இருக்கிறது.

    நம்பிக்கை பாடல்

    வைரமுத்து வரிகளில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா குறித்த பாடலை பாடியிருந்தார். மேலும், பல பிரபலங்களும் கொரோனா வைரஸ் பாதிப்பை பாடல்கள் மூலம் வெளியிட்டு இருந்தனர். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த பாடலில் கொரோனா குறித்த வரிகளே இல்லாமல், மனித இனத்திற்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் அமைந்திருக்கிறது.

    டிரெண்டிங்

    டிரெண்டிங்

    நேற்று பாடல் வரிகளுடன், அறிவும் அன்பும் போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், தற்போது அதன் வீடியோ பாடல் வெளியாகி உள்ள நிலையில், கமல்ஹாசன் ரசிகர்கள் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் அந்த பாடலை வேற லெவலில் ட்விட்டரில் #கமலின்_அறிவும்அன்பும் மற்றும் #ArivumAnbum என்ற ஹாஷ்டேக்குகளை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்.

    பக்கா ஃபிரேம்ஸ்

    பக்கா ஃபிரேம்ஸ்

    வீட்டில் இருந்தபடியே உருவாக்கப்பட்டு இருந்தாலும், கமல்ஹாசன் இயக்கம் என்பதாலே அதன் தரம் அதிகரித்து காணப்படுவது அவரது ரியல் மேஜிக்கைத் தான் காட்டுகிறது. மேலும், பாடலின் இடையே வரும் ஒவ்வொரு ஃபிரேம்ஸும் அசத்தலாக இருக்கிறது. புத்தர், பெரியார், பாரதிதாசன், அறிஞர் அண்ணா, அம்பேத்கர், மகாத்மா காந்தி என தலைவர்களின் ஃபிரேம்ஸ்கள் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை அள்ளி வருகிறது.

    என்றுமே அழியாதது

    என்றுமே அழியாதது

    இந்த உலகில் என்றுமே அழியாது இருப்பது அறிவும் அன்பும் என்பதை வலியுறுத்தவே இந்த பாடலை உலக நாயகன் கமல்ஹாசன் உருவாக்கி உள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகமே நிலை குலைந்து போயிருக்கும் நிலையில், நமது அறிவும் அன்பும், இந்த நிலையை மாற்றி மீண்டும் நல்ல சமுதாயத்தை உருவாக்கும் என்கிற நம்பிக்கை விதையை விதைக்கிறது.

    இரண்டும் உள்ள தலைவன்

    இரண்டும் உள்ள தலைவன்

    மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அறிவும், அன்பும் உடைய தலைவர் என்று அவரது ரசிகர்கள் ட்விட்டரை தெறிக்க விட்டு வருகின்றனர். இந்தியளவில் டிரெண்டிங்கில் இந்த ஹாஷ்டேக்கை அதிகளவில் ட்வீட்களை பதிவிட்டு டிரெண்டாக்கி வருகின்றனர். மேலும், கமல்ஹாசனின் சிறப்பு அம்சங்களையும் புகழ்ந்து வருகின்றனர்.

    English summary
    Kamal Haasan’s Arivum Anbum song out now. This Corona virus awareness song portrayed Humanity, Love and Knowledge never destroyed.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X