Arjun: விஜய்யிடம் ஆட்டிட்யூட் காட்ட நினைத்த அர்ஜுன்... தட்டி ஓரமாக உட்கார வைத்த லோகேஷ்

சென்னை: விஜய்யின் லியோ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

மங்காத்தா படத்திற்குப் பிறகு லியோவில் அர்ஜுன் நெகட்டிவ் ரோலில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், லியோ படப்பிடிப்பில் இருந்து அர்ஜுன் பற்றிய சம்பவம் ஒன்று வைரலாகி வருகிறது.

 Arjun: Action King Arjuns controversy with Vijay and Lokesh on the set of Leo

அர்ஜுனை டீல் செய்த லோகேஷ் கனகராஜ்

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களைத் தொடர்ந்து லியோ படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். யாரிடமும் அசிஸ்டெண்ட்டாக இல்லாமல் தனக்கென ஒரு பாதையை அமைத்துக்கொண்டு பயணித்து வருகிறார். இதுவரை தான் இயக்கிய எந்தப் படங்களிலும் ஹீரோக்களின் அட்வைஸ் எதையும் கேட்க மாட்டாராம்.

அதனால் தான், ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் கமல் நடித்த விக்ரம் படம் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது. அதேபோல், முன்னணி நடிகர்களை வைத்து மல்டி ஸ்டார்ஸ் படங்களை இயக்கி வருகிறார். இந்நிலையில், விக்ரம் படத்தை விடவும் லியோவில் ஏராளமான நடிகர்கள் கமிட்டாகியுள்ளனர். அவர்களில் மிக முக்கியமானவர் அர்ஜுன். 90ஸ் ஹீரோவான அர்ஜுனுக்கு ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் என்ற பெயர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நேர்மையான போலீஸ் ஆபிஸர், மிலிட்டரி மேன் என நாட்டுப் பற்று மிக்க ஹீரோவாகவே நடித்து வந்த அர்ஜுன், முதன்முறையாக மங்காத்தா படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து லியோ படத்திலும் விஜய்க்கு வில்லனாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. அதேபோல், பொது இடங்களில் பார்க்க சைலண்டாக இருந்தாலும், ஷூட்டிங் ஸ்பாட்டில் ஓவர் ஆட்டிட்யூட் காட்டும் நடிகர் என்ற இமேஜ் அர்ஜுனுக்கு உள்ளது.

கொஞ்சம் பந்தாவான பேச்சு, நடை என டாப் ஹீரோக்களை விடவும் சீன் போட ட்ரை பண்ணுவாராம். லியோ படத்திலும் அதே ஆட்டிட்யூட் காட்ட நினைத்துள்ளார் அர்ஜுன். ஆனால், விஜய் எவ்வளவு ஜாலியாக இருந்தாலும் டக்கென சீரியஸ் ஆகிவிடுவார் என்பதால் அவரிடம் Distant மெயிண்டேன் செய்து வருகிறாராம். விஜய்க்கும் அர்ஜுன் பற்றி தெரியும் என்பதால் அதே லெவலில் தான் அவரை வைத்துள்ளாராம்.

 Arjun: Action King Arjuns controversy with Vijay and Lokesh on the set of Leo

இன்னொருபக்கம் ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குநர் லோகேஷுக்கு அட்வைஸ் செய்யலாம் என முயற்சித்துள்ளார் அர்ஜுன். ஆனால் அவர் யார் பேச்சுக்கும் இடம் கொடுக்க மாட்டார், தான் நினைத்ததை மட்டுமே படமாக்குவார் என்பதால் அர்ஜுனின் ஐடியாவை கண்டுகொள்ளவே இல்லையாம். அதிலிருந்து ஷூட்டிங் ஸ்பாட் சென்றால் தனது காட்சிகளை மட்டும் நடித்துவிட்டு அப்படியே ரிட்டர்ன் ஆகிவிடுகிறாராம் அர்ஜுன்.

இதனால், செட்டில் அர்ஜுன் அமைதியாக இருப்பதை பார்த்து பலரும் ஷாக்காகியுள்ளனர். தற்போது சென்னையில் விஜய் - அர்ஜுன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்தப் படத்திற்குப் பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 171 படத்திலும் அர்ஜுன் வில்லனாக நடிக்கலாம் என தகவல் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், இதுகுறித்து அபிஸியலாக எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X