'வொய்ட் டெவில்' அர்ஜூன் வில்லனாக நடிக்கும் அடுத்த படம் எது தெரியுமா?

By Vignesh Selvaraj

Recommended Video

'வொய்ட் டெவில்' அர்ஜூன் வில்லனாக நடிக்கும் அடுத்த படம்- வீடியோ

சென்னை : விஷாலின் 'இரும்புத்திரை' படத்தில் வில்லனாக நடித்து அசத்தினார் அர்ஜூன். இந்தப் படத்தில் 'வொய்ட் டெவில்' எனும் கேரக்டரில் சைபர் க்ரைம் டானாக நடித்திருந்தார். அலட்டல் இல்லாமல் சைலண்ட் டெரர் நடிப்பை வெளிப்படுத்திய அர்ஜூனுக்கு தொடர்ந்து வில்லன் வாய்ப்புகள் வருகின்றன.

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருக்கும் 'காளி' படம் வரும் மே 18-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படம் 'காசி' என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகிறது. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை வெற்றிப்படமாக்க ப்ரொமோஷன் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

Arjun to acts as villain in vijay antony film

இசையமைப்பாளராக கலக்கி நடிகராகியிருக்கும் விஜய் ஆண்டனி, 'காளி' படத்தையடுத்து 'திமிரு பிடிச்சவன்', 'கொலைகாரன்', 'திருடன்' ஆகிய படங்களில் நடிக்கிறார். மேலும் 'மூடர்கூடம்' நவீன் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

'கொலைகாரன்' படத்தை ஆண்ட்ரு இயக்குகிறார். இந்தப் படத்தில் அர்ஜூன் வில்லனாக நடிக்க இருக்கிறார். சமீபத்தில் வெளியான விஷாலின் 'இரும்புத்திரை' படத்தில் வில்லனாக அர்ஜூனின் நடிப்பு ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளதால் அவரை நடிக்கவைக்கத் திட்டமிட்டுள்ளனர்.

'கொலைகாரன்' படத்தில் விஜய் ஆண்டனிக்கு வில்லனாக நடிக்கும் அர்ஜூனுக்கு மேலும் சில படங்களிலும் வில்லனாக நடிக்க வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றனவாம். மங்காத்தாவில் நெகட்டிவ் கேரக்டரில் அசத்திய அர்ஜூன் தொடர்ந்து வில்லனாக நடிப்பாரா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X