தீயவர் குலைகள் நடுங்க.. டைட்டிலே தாறுமாறா இருக்கே.. அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் மிரட்டப்போறாங்க!

சென்னை: திட்டம் இரண்டு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், மீண்டும் ஒரு கிரைம் த்ரில்லர் படத்தில் கமிட் ஆகி உள்ள அவர் இந்த முறை ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் உடன் இணைந்து நடிக்கப் போகிறார்.

அந்த படத்திற்கு தீயவர் குலைகள் நடுங்க என செம மிரட்டலான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அதன் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி இருக்கிறது.

அர்ஜுன் உடன் இணைந்து

அர்ஜுன் உடன் இணைந்து

ஆக்சன் கிங் அர்ஜூன், ஐஷ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ஆக்‌ஷன், புதிய க்ரைம் திரில்லர் படத்திற்கு தீயவர் குலைகள் நடுங்க என தலைப்பிடப்பட்டுள்ளது. GS ARTS தயாரிப்பாளர் G. அருள் குமார் தயாரிப்பில், தினேஷ் இலெட்சுமணன் இயக்கும் இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வித்தியாசமான கதாபாத்திரத்தில்

வித்தியாசமான கதாபாத்திரத்தில்

இது ஒரு க்ரைம் -த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் கதை, கொடூரமான முறையில் ஒரு கொலை நிகழ்கிறது. அதனை விசாரிக்கும் பின்ணனியில் அழுத்தமான க்ரைம் -த்ரில்லர் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மன இறுக்கம் கொண்ட ஆட்டிஸ்டிக் குழந்தைகளின் பின்னணியில் ஒரு பெண் கதாப்பாத்திரம் மைய கதாப்பாத்திரமாக அமைக்கப்பட்டுள்ளது.

தீயவர் குலைகள் நடுங்க

தீயவர் குலைகள் நடுங்க

எந்த வித கதாப்பாத்திரம் தந்தாலும் தனது திறமையான நடிப்பின் மூலம் அசத்தும், நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் முதன்மை பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆக்சன் கிங் அர்ஜூன் இன்வெஸ்டிகேடிவ் ஆபிஸராக நடிக்கிறார். ரசிகர்களுக்கு புது அனுபவம் தரும் திரில்லர் அனுபவமாக "தீயவர் குலைகள் நடுங்க" திரைப்படம் உருவாகியுள்ளது.

டெக்னிக்கல் டீம்

டெக்னிக்கல் டீம்

இப்படத்தின் தொழில் நுட்ப குழுவில் பரத் ஆசீவகன் (இசை), லாரன்ஸ் கிஷோர் (எடிட்டர்), சரவணன் அபிமன்யு (ஒளிப்பதிவாளர்), அருண் சங்கர் துரை (கலை இயக்குனர்), கணேஷ் (ஸ்டண்ட் மாஸ்டர்), சுரேஷ் சந்திரா (மக்கள் தொடர்பு )பணிகளை செய்துள்ளனர். ஆக்ஷன் கிங் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்க, ராம்குமார் சிவாஜிகணேசன், GK.ரெட்டி, பிரவீன் ராஜா, பிராங்க்ஸ்டர் ராகுல், அபிராமி வெங்கடாசலம் மற்றும் இன்னும் பல முக்கிய பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர். தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இந்த படமும் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X