விஜய்யா இருக்கிறது ஈஸியா? டஃப்பா?.. லியோ விழாவில் திடீரென முதல்வன் புகழேந்தியா மாறிய அர்ஜுன்!

சென்னை: லியோ படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஜய்யுடன் அர்ஜுன் நடத்திய கேள்வி பதில் செஸன் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது.

லியோ ஆடியோ லான்ச்சில் மிஸ் பண்ண தளபதி தரிசனத்தை விஜய் ரசிகர்கள் லியோ படத்தின் வெற்றி விழா மூலமாக கண்டு சந்தோஷத்தில் துள்ளிக் குதித்து வருகின்றனர்.

Arjun asked Did being Vijay is a easy one or tough one and Thalapathy gives an epic answer

இந்த ஆண்டின் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தி உள்ள படமாக லியோ மாறியுள்ள நிலையில், வெற்றி விழா நேரு உள்விளையாட்டு மைதானத்தில் களைகட்டி உள்ளது.

540 கோடி வசூல்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், சாண்டி, மன்சூர் அலி கான், கெளதம் மேனன், பிரியா ஆனந்த், மடோனா செபாஸ்டியன், மேத்யூ தாமஸ், ஜார்ஜ் மரியன், மாயா, சிறப்பு தோற்றத்தில் கமல் என பலர் நடித்துள்ள லியோ திரைப்படம் 540 கோடி வசூலை கடந்து மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில், நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக வெற்றி விழா கொண்டாடப்பட்டது.

Arjun asked Did being Vijay is a easy one or tough one and Thalapathy gives an epic answer

ஹரோல்ட் தாஸ் என்ட்ரி: வெற்றி விழாவில் நடிகர் விஜய், அர்ஜுன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகை த்ரிஷா, மிஸ்கின், சாண்டி, மன்சூர் அலி கான், ரத்னகுமார், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். இசையமைப்பாளர் அனிருத் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. ஹரோல்ட் தாஸாக லியோவில் மிரட்டிய ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடிகர் விஜய்யுடன் நடத்திய உரையாடல் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

புகழேந்தியாக மாறிய அர்ஜுன்: நடிகர் விஜய்யுடன் அர்ஜுன் மேடை ஏறி கேள்வி பதில் போன்று பேசியது ரசிகர்களை முதல்வன் படத்தின் புகழேந்தியை கண் முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளதாக ரசிகர்கள் ட்வீட் போட்டு வருகின்றனர்.

விஜய்யா இருப்பது கஷ்டமா?: நடிகர் அர்ஜுன்: விஜய்யா இருக்கிறது ஈஸியா? டஃப்பா?

நடிகர் விஜய்: வெளியில இருந்து பார்க்கிறவங்களுக்கு கொஞ்சம் கஷ்டமா தெரியலாம்.. ஆனால், ஈஸி தான் சார்.. அதுக்கு மெயின் ரீசன் ரசிகர்கள் தான் என ரசிகர்களை நோக்கி கையை காட்டிய நிலையில், ஒட்டுமொத்த அரங்கமும் கரகோஷத்தில் அதிர்ந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X