அர்ஜுன் தாஸ் ஜோடியான கொட்டுக்காளி ஹீரோயின்.. அடுத்த படத்துக்கு பூஜையே போட்டாச்சு.. அதிதி ஷங்கர் படம்?
சென்னை: கைதி, மாஸ்டர் படங்களில் வில்லனாக நடித்த நடிகர் அர்ஜுன் தாஸ் தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த ஆண்டு வித்தியாசமான கதையம்சம் கொண்ட 'பாம்' படத்தில் நடித்திருந்தார். அந்த படம் வெளியான நிலையில், விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்றாலும், பாக்ஸ் ஆபீஸில் பெரிதாக கல்லா கட்டவில்லை.
அதிதி ஷங்கருடன் இணைந்து அர்ஜுன் தாஸ் நடித்த ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த வருடமாவது அந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னமும் அந்த படம் வெளியாகவில்லை.

இந்நிலையில், அடுத்ததாக மலையாள நடிகை அன்னா பென் உடன் இணைந்து ஒரு புதிய படத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்கவுள்ளார். அந்த படத்திற்கான பூஜை போடப்படது. அன்னா பென் பிரபாஸ் நடித்த கல்கி 2898 ஏடி, சூரியின் கொட்டுக்காளி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அர்ஜுன் தாஸ் புதுப்பட பூஜை: அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகிபாபு நடிப்பில், பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் ( Power House Pictures) சார்பில் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி, இயக்க, புதுமையான களத்தில் உருவாகும் ஃபேமிலி எண்டர்டெயினர் படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள இன்று இனிதே நடைபெற்றது.

ஃபேமிலி எண்டர்டெயினர்: அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் அம்சங்களுடன், புதுமையான களத்தில், ஒரு முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படமாக, இப்படத்தை இயக்குகிறார் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ். தமிழ் சினிமாவில் தொடர்ந்து மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்து வரும் அர்ஜூன் தாஸ் மற்றும் நடிகை அன்னா பென் நடிக்கவுள்ள இந்த படத்தில், நகைச்சுவையில் கலக்கி வரும் யோகிபாபு உடன், வடிவுக்கரசி என நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இந்த நால்வரைச் சுற்றித் தான் படத்தின் மொத்தக்கதையும் பின்னப்பட்டுள்ளது.

சென்னையில் பூஜை: இப்படத்தின் பூஜையை தொடர்ந்து சென்னை, மங்களூர், மும்பை ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. தமிழில் தொடர் வெற்றிப்படங்களை தந்து வரும், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். படத்தின் தலைப்பு மற்ற விபரங்கள் ஒவ்வொன்றாக விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.


Click it and Unblock the Notifications











