காதெல்லாம் கூசுது காளிதாஸ் ஜெயராம்.. வாயை தொறந்தாலே கெட்ட வார்த்தை.. ’போர்’ டிரெய்லர் ரிலீஸ்!

சென்னை: பாலிவுட் முதல் கோலிவுட் வரை தனது தனித்துவமான இயக்கத்தால் மிரட்டி வரும் பிஜோய் நம்பியார் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், சஞ்சனா நடராஜன், வாழ் படத்தில் ஹீரோயினாக நடித்த டிஜே பானு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள 'போர்' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.

அர்ஜுன் தாஸ் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானார். தொடர்ந்து அந்தகாரம், அநீதி உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த போர் படத்திலும் அவர் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

Arjun Das and Kalidas Jayaram Por trailer contains many bad words

விக்ரம் படத்தில் கமல்ஹாசனின் மகனாக நடித்திருந்த நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் நட்சத்திரம் நகர்கிறது படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்நிலையில், இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் உடன் இணைந்து இன்னொரு ஹீரோவாக நடித்திருக்கிறார்.

போர் டிரெய்லர் ரிலீஸ்: ஷைத்தான் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிஜோய் நம்பியார். தமிழில் சோலோ மற்றும் டேவிட் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். அந்த இரு படங்களும் தமிழ், இந்தி மொழிகளில் வெளியானது. அதே போல தற்போது இந்த படம் தமிழில் போர் என்றும் இந்தியில் டங்கே என்றும் வெளியாகிறது. தமிழ் டிரெய்லரை ஆர்யா வெளியிட்டார். அதே போல இந்தி டிரெய்லரை ஜான் ஆபிரகாம் தற்போது வெளியிட்டுள்ளார்.

Arjun Das and Kalidas Jayaram Por trailer contains many bad words

அர்ஜுன் தாஸ் vs காளிதாஸ் ஜெயராம்: இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் காளிதாஸ் இடையே நடக்கும் ஈகோ மோதல் தான் படம் என்பது டிரெய்லரை பார்த்தாலே தெரிகிறது. யார் நல்லவர், யார் கெட்டவர் என்பதை கெஸ் பண்ண முடியாத அளவுக்கு காட்சிகள் அமைந்துள்ளன. வசனத்தை பொறுத்தவரையில் அர்ஜுன் தாஸை விட காளிதாஸ் ஜெயராம் பேசுவது கொஞ்சம் வில்லன் தொனியில் இருக்கிறது.

கெட்ட வார்த்தை: தணிக்கை செய்யப்படும் போது எப்படி இருந்தாலும் இந்த கெட்ட வார்த்தைகள் எல்லாம் தூக்கப்படும். ஆனால், டிரெய்லரில் கெட்ட வார்த்தைகளை அடுக்கி படத்தை இளைஞர்கள் மத்தியில் வியாபாரம் செய்ய மோசமான ஸ்ட்ராட்டஜியை படக்குழுவினர் செய்து வருகின்றனர். காளிதாஸ் ஜெயராம் டிரெய்லரில் வரும் காட்சிகளில் எல்லாம் யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது போல கெட்ட வார்த்தைகள் தெறிக்கின்றன. அதை தவிர்த்து விட்டு பார்த்தாலே மேக்கிங்கிற்காக தாராளமாக படத்தை பார்க்கலாம் என்று தான் தோன்றுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X