Con City Box Office: திங்கட்கிழமை தேறியதா கான் சிட்டி.. அர்ஜுன் தாஸ் படம் ஹிட் லிஸ்ட்டில் வருமா?
சென்னை: ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி, விடிவி கணேஷ், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான கான் சிட்டி திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்ற நிலையில், படத்தின் வசூல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
முதல் நாளில் 75 லட்சத்துக்கும் குறைவான ஓபனிங்கை பெற்ற இந்த திரைப்படம் 4 நாட்களில் 4 கோடி வசூலை கடந்து வெற்றியை நோக்கி பயணித்து வருகிறது.

வெறும் 8 கோடி பட்ஜெட்டில் கச்சிதமாக கான் சிட்டி படத்தை பவர்ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிக்க, ஹரிஷ் துரைராஜ் ஸ்கேம் கதையை காமெடி மசாலா தூவி ரசிகர்களை கடைசி வரை என்கேஜாக வைத்துள்ள நிலையில், கடந்த வாரம் வெளியான படங்களை விட பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்து சீரான வசூலை வாரிக் குவித்து வருகிறது கான் சிட்டி.
அர்ஜுன் தாஸ் தொடர் புரமோஷன்: நூறு சாமி படத்துக்கு விஜய் ஆண்டனி தொடர்ந்து பல்வேறு ஊர்களில் உள்ள தியேட்டர்களுக்குச் சென்று எப்படியாவது தனது படத்தை லாபகரமான படமாக மாற்ற வேண்டும் என கடுமையாக உழைத்தது போலவே அர்ஜுன் தாஸும் படம் வெளியான பிறகு தொடர்ந்து பல்வேறு தியேட்டர்களுக்கு விசிட் அடித்து ரசிகர்களுக்கு படம் பிடித்துள்ளதா? என்ன சொல்கிறார்கள் எனக் கேட்டு வருகிறார். செல்லும் இடங்களில் எல்லாம் அர்ஜுன் தாஸுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அடுத்தும் இதே போல ஒரு பக்காவான கமர்ஷியல் படத்தைக் கொடுத்தால் அவரது மார்க்கெட் உயர்ந்து விடும் என்கின்றனர்.
4 நாளில் வசூல் எவ்வளவு?: அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி என அனைவருமே ஆளுக்கொரு ஸ்கேம் செய்துக் கொண்டிருக்க, அனைவரும் ஒன்றாக சேர்ந்து செய்யும் ஸ்கேம் என்ன ஆனது? அவர்கள் ஏன் அதையெல்லாம் செய்கின்றனர் என்பதற்கு காரண காரியங்களுடன் திரைக்கதையை எங்கேயும் போரடிக்காமல் கொடுத்த விதத்தில் தொடர்ந்து ரசிகர்கள் கடந்த வெள்ளி முதல் திங்கள் வரை கான் சிட்டி படத்தை அதிகம் தேர்வு செய்து பார்த்து வருகின்றனர். சனி, ஞாயிறு 1.30 கோடி அளவுக்கு வசூல் அதிகரித்த நிலையில், திங்கட்கிழமையான நேற்று 48 லட்சம் வரை வசூல் வந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 4.29 கோடி கிராஸ் கலெக்ஷன் என சாக்னிக் தெரிவித்துள்ளது.
ஹிட் லிஸ்ட்டில் வருமா?: 8 கோடி பட்ஜெட்டில் உருவான கான் சிட்டி திரைப்படம் இப்போவே 4 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டிய நிலையில், இந்த வாரம் முடிவில் கண்டிப்பாக 8 கோடிக்கும் அதிகமான வசூலை அடைந்து விடும் என்கின்றனர். மேலும், டிஜிட்டல் உரிமம், சாட்டிலைட் உரிமம் மற்றும் ஆடியோ உரிமம் உள்ளிட்டவை மூலம் படம் லாபகரமான படமாக அர்ஜுன் தாஸுக்கு மாறிவிடும் என்கின்றனர். ஆனால், பெரிய பிளாக்பஸ்டர் படமாக மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications