அர்ஜுன் தாஸுக்கு லைஃப் டைம் செட்டில்மென்ட்.. காதலியுடன் எப்படி ரொமான்ஸ் பண்றாரு பாருங்க!

சென்னை: 2012ம் ஆண்டு வெளியான பெருமான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அர்ஜுன் தாஸ் வில்லன் நடிகராகவும், ஹீரோவாகவும் மாஸ் காட்டி வருகிறார். இந்நிலையில், தனது காதலியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை அவர் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியான கைதி படத்தில் "லைஃப் டைம் செட்டில்மெண்ட்" என அர்ஜுன் தாஸ் தனது கம்பீரக் குரலில் பேசியதில் இருந்தே ரசிகர்களின் ஃபேவரைட் ஆகி விட்டார்.

Arjun Das hero lover

கல்கி 2898 ஏடி படத்தில் கிருஷ்ணருக்கு தெலுங்கில் குரல் கொடுத்ததே அர்ஜுன் தாஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது. கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் பிசியான நடிகராக மாறியுள்ள அர்ஜுன் தாஸ் காதலித்து வருகிறாரா என ரசிகைகள் ஷாக் ஆகியுள்ளனர்.

மிரட்டும் அர்ஜுன் தாஸ்: பெருமான் படத்தைத் தொடர்ந்து தெலுங்கில் ஆக்ஸிஜன் படத்தில் நடித்த அர்ஜுன் தாஸுக்கு கைதி படம் மிகப்பெரிய படமாக அமைந்தது. அதன் பின்னர் தளபதி விஜய்யின் மாஸ்டர் மற்றும் கமல்ஹாசனின் விக்ரம் என தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தகாரம், புட்ட பொம்மா, அநீதி, போர், ரசவாதி உள்ளிட்ட பல படங்களில் மிரட்டியுள்ளார்.

பவன் கல்யாண் படம்: ஆந்திராவின் துணை முதல்வராக உள்ள பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் ஓஜி படத்திலும் அர்ஜுன் தாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபாஸ் நடிப்பில் வெளியாகி 1000 கோடி வசூல் செய்த கல்கி 2898 ஏடி திரைப்படத்தில் கிருஷ்ணரின் முகத்தைக் காட்டாமல் அர்ஜுன் தாஸின் குரலை வைத்தே கூஸ்பம்ப்ஸ் கொடுத்திருந்தார் நாக் அஸ்வின்.

Arjun Das hero lover

காதலியுடன் அர்ஜுன் தாஸ்: நடிகர் அர்ஜுன் தாஸ் ஏற்கனவே ஐஸ்வர்யா லட்சுமியை காதலிப்பதாக வதந்திகள் பரவின. அதன் பின்னர் அது ஒரு படத்திற்கான புரமோஷன் என தெரியவந்தது. இந்நிலையில், தனது காதலியின் முகத்தைக் காட்டாமல் மலை பிரதேசத்தில் இருவரும் கட்டிப்பிடித்துக் கொண்டு இருக்கும் பேக் ஷாட் போட்டோவை வெளியிட்டு ஹார்ட்டீன் போட்டுள்ளார் அர்ஜுன் தாஸ். உங்கள் காதலி யார் என்றும் முகத்தைக் காட்ட மாட்டீர்களா என்றும் ரசிகர்கள் அர்ஜுன் தாஸிடம் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

ஹீரோவாக சொதப்பல்: வில்லனாக மிரட்டி வந்த அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடித்த பல படங்கள் இந்த ஆண்டு வெளியானது. அநீதி, போர் மற்றும் ரசவாதி உள்ளிட்ட படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றே தகவல்கள் வெளியாகி உள்ளன. கூடிய சீக்கிரமே ஹீரோவாகவும் கமர்ஷியல் வெற்றியை அர்ஜுன் தாஸ் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X