ரஜினிகாந்த்தின் கூலி.. அர்ஜுன் தாஸ் நடிக்கிறாரா?.. அவரே சொன்ன பதிலை பாருங்க

சென்னை: ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். ஜெய் பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் அந்தப் படம் அக்டோபர் மாதம் திரைக்கு வரவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க இந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். படத்துக்கு கூலி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவிருக்கும் சூழலில் அந்தப் படத்தில் தான் நடிக்கிறேனா இல்லையா என்பது குறித்து அர்ஜுன் தாஸ் பேசியிருக்கிறார்.

ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜெய் பீம் படத்தின் மூலம் பெரும் கவனத்தை ஈர்த்தவர் ஞானவேல் என்பதால் இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. படத்தின் டைட்டில் டீசரும் நல்ல வரவேற்பையே பெற்றது. படமானது அக்டோபர் மாதம் ரிலீஸாகும் என்று சமீபத்தில்தான் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Arjun Das has talked about acting in Coolie Here are the details

தலைவர் 171: இதற்கிடையே கோலிவுட்டின் தற்போதைய மோஸ்ட் வாண்டட் இயக்குநராக திகழ்ந்துகொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அவர் கமல் ஹாசனை வைத்து விக்ரம் என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்தார். அடுத்து அவர் இயக்கிய லியோ படம் சறுக்கியது. சூழல் இப்படி இருக்க ரஜினியை வைத்து படம் இயக்க கமிட்டானார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. நிச்சயம் கமலுக்கு கொடுத்த மெகா ஹிட் போலவே இந்தப் படத்தை ரஜினிக்கு கொடுக்க லோகேஷ் திட்டமிட்டிருக்கிறார்.

லோகி விஷன்: ரஜினியை வைத்து எப்படிப்பட்ட படத்தை லோகேஷ் கொடுக்கப்போகிறார் என்ற ஆவல் கோலிவுட்டில் இருக்கிறது. இதுகுறித்து ஒரு பேட்டியில் பேசியிருந்த லோகேஷ், 'நான் கமலின் தீவிர ரசிகராக இருந்தாலும் ரஜினியின் படங்களையும் ஓபனிங் டே ஓபனிங் ஷோ பார்ப்பேன். ரஜினிகாந்த்தை நான் ஒரு விஷனில் பார்க்கிறேன். அப்படித்தான் இந்தப் படமும் இருக்கும். முழுக்க முழுக்க இது ஒரு எக்ஸ்பெரிமெண்ட்டல் படம்தான்" என்றிருந்தார். இதனால் கண்டிப்பாக இந்தப் படத்தில் தரமான சம்பவம் இருக்கும் என்று நம்பிக்கையோடு இருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். படத்துக்கு கூலி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அர்ஜுன் தாஸ்: சூழல் இப்படி இருக்க கூலி படத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்கிறார் என்று தகவல்கள் பரவின. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் தாஸ், "லியோ படத்திலேயே நான் நடிக்கவில்லையே. ஆனால் லோகேஷ் கனகராஜ் எனக்கு எப்போதும் சிறந்த நண்பர்தான். அவர் அழைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். அதேசமயம் இப்போதுவரைக்கும் கூலி படத்தில் நான் நடிக்கிறேனா இல்லையா என்பது தெரியவில்லை. அவர்தான் சொல்ல வேண்டும்" என்றார்.

ரசவாதி: அர்ஜுன் தாஸ் இப்போது ரசவாதி என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை மௌனகுரு, மகாமுனி படங்களை இயக்கிய சாந்தகுமார் இயக்கியிருக்கிறார். தான்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடிக்க; தமன் இசையமைத்திருக்கிறார். மே 10ஆம் தேதி படம் ரிலீஸாகவிருக்கிறது. சாந்தகுமார் ஏற்கனவே இயக்கிய இரண்டு படங்களும் அருமையாக இருந்ததால் கண்டிப்பாக இந்தப் படமும் அப்படியே இருக்கும் என்று ரசிகர்கள் இப்போதே பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X