இயக்குனர் வசந்தபாலனின் அடுத்த படம்..மாஸ்டர் வில்லன் நடிக்கிறார்!
சென்னை : நடிகர் அர்ஜுன் தாஸ் கைதி படத்தில் வில்லனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதை தொடர்ந்து மாஸ்டர் படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அர்ஜுன் தாஸ்.
தற்போது இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

கர்ஜனையான குரல்
அர்ஜுன் தாஸ் கைதி படத்தில் வில்லனாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனது கர்ஜனையான குரலால் பலரையும் கவர்ந்து தன் பக்கம் இழுத்தார். பின்னர் மாஸ்டர் படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட அர்ஜுன் தாஸுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அங்கீகாரம் கிடைத்தது.

ரசிகர்கள் வரவேற்பு
கடந்த ஆண்டு அந்தகாரம் திரைப்படம் Netflix ல் நேரடியாக வெளியாகி அதில் அர்ஜுன் தாஸின் நடிப்பு பலரின் பாராட்டுகளை அள்ளியது. கடந்த வருடம் OTT யில் நேரடியாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படங்களில் அந்தகாரம் முதன்மை வகிக்கிறது.

காத்திருப்பில் ஜெயில்
இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான வெயில், அங்காடி தெரு, காவியத் தலைவன் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து ரிலீசுக்கு காத்திருக்கும் ஜீ. வி.பிரகாஷ்-ன் ஜெயில் படத்தை இயக்கியுள்ளார் வசந்தபாலன்.

விரைவில் அறிவிப்பு
2019ம் ஆண்டு ஹிந்தியில் ஜொனதன் அகஸ்டின் இயக்கத்தில் வெளியான லிஃப்ட் பாய் திரைப்படம் பெரிய வெற்றி பெற்றது. தற்போது அந்த படத்தின் ரீமேக்கை வசந்தபாலன் இயக்க அர்ஜுன் தாஸ் நடிக்கவுள்ளார். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.


Click it and Unblock the Notifications











