ரத்தம், முடின்னு சின்ன சின்ன விஷயத்தையும் கவனிப்பாரு... டீடெய்ல் சொன்ன அர்ஜூன் தாஸ்
சென்னை : லோகேஷ் கனகராஜ் டைரக்ஷனில் கைதி படத்தில் அறிமுகமாகி நடித்திருந்தார் அர்ஜூன் தாஸ்.
Recommended Video
தொடர்ந்து அவரது இயக்கத்தில் மாஸ்டர் படத்திலும் அடுத்ததாக தற்போது விக்ரம் படத்திலும் கமிட் ஆகியுள்ளார்.
இந்நிலையில் கைதி படத்தின் ஷூட்டிங்கின்போது லோகேஷ் கனகராஜ் சின்ன சின்ன விஷயங்களிலும் காட்டிய கவனம் குறித்து பேசியுள்ளார்.

கைதி படத்தில் அறிமுகம்
நடிகர் அர்ஜூன் தாஸ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி லீட் ரோலில் நடித்திருந்த கைதி படத்தின்மூலம் அறிமுகமானவர். இந்த படத்தில் இவரது சிறப்பான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை முதல் படத்திலேயே பெற்றவர். தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் படத்திலும் அர்ஜூன் தாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கைதி படத்தில் அறிமுகம்
நடிகர் அர்ஜூன் தாஸ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி லீட் ரோலில் நடித்திருந்த கைதி படத்தின்மூலம் அறிமுகமானவர். இந்த படத்தில் இவரது சிறப்பான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை முதல் படத்திலேயே பெற்றவர். தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் படத்திலும் அர்ஜூன் தாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மிரட்டிய அர்ஜூன் தாஸ்
இரண்டு படங்களிலும் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டிய அர்ஜூன் தாஸ் தற்போது இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் லீட் ரோலில் நடித்து வருகிறார். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலேயே அடுத்ததாக உருவாகிவரும் விக்ரம் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சூட்டிங் குறித்த நினைவலை
இந்நிலையில் கைதி படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் குறித்த அப்டேட்டை தனது சமூக வலைதளத்தில் அர்ஜூன் தாஸ் தற்போது பகிர்ந்துள்ளார். போலீஸ் ஸ்டேஷனில் நடத்தப்பட்ட பிரத்யேக படப்பிடிப்பின்போது அவர் கல்லூரி மாணவர்களால் கட்டி வைக்கப்பட்டு அடிக்கப்படும் காட்சி குறித்து விளக்கியுள்ளார்.

சின்ன சின்ன விஷயங்கள்
இதுகுறித்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள அர்ஜூன் தாஸ், இதற்கென தனது லுக்கை பிரத்யேகமாக லோகேஷ் கனகராஜ் செட் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். காட்சியின்போது உபயோகப்படுத்த வேண்டிய ரத்தம் மற்றும் முடி எவ்வாறு முகத்தில் விழ வேண்டும் என்பது உள்ளிட்ட சின்ன சின்ன விஷயங்களையும் அவர் கவனித்து செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











