கைதி, மாஸ்டரை தொடர்ந்து அந்த தங்கத்தை கமல்ஹாசனின் விக்ரம் படத்திலும் இறக்கப் போறாங்களாம்!
சென்னை: கைதி படத்தில் "லைஃப் டைம் செட்டில்மென்ட் டா" எனும் வசனத்தை பேசி ரசிகர்களை கவர்ந்த அர்ஜுன் தாஸ், மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்யுடன் பக்காவாக கபடியும் ஆடினார்.
இந்நிலையில், உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாக உள்ள விக்ரம் படத்திலும் அவரை நடிக்க வைக்க இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
வித்தியாசமான குரலில் மிரட்டல் நடிப்பால் சமீப காலமாக அதிரடி காட்டி வருகிறார் நம்ம அர்ஜுன் தாஸ்.

கைதி வில்லன்
மாநகரம் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான பிளாக்பஸ்டர் படமான கைதி படத்தில் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார் அர்ஜுன் தாஸ். அவன் தலையை கொண்டு வருவனுக்கு லைஃப் டைம் செட்டில்மென்ட் ட என அவர் பேசும் வசனம் டிரேட் மார்க் வசனமாக மாறியது.

மாஸ்டருடன் கபடி
தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்திலும் நெகட்டிவ் ரோலில் நடித்து பட்டையை கிளப்பி இருந்தார் அர்ஜுன் தாஸ். பவானியின் கையாளாக இருக்கும் அர்ஜுன் தாஸ் மாஸ்டருடன் கபடி விளையாடும் அந்த காட்சி வேற லெவல் ஹைலைட். மேலும், விஜய் மற்றும் விஜய்சேதுபதிக்கு அதிகப்படியாக இவருக்குத்தான் ஸ்க்ரீன் ஸ்பேஸ் கொடுக்கப்பட்டு இருக்கும்.

கமலின் விக்ரம்
மாஸ்டர் படத்தை தொடர்ந்து தனது மாஸ்டர் கமலுடன் இணைந்து பணியாற்றி வருகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். விக்ரம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தில் விஜய்சேதுபதி மற்றும் பகத் ஃபாசில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இன்னொரு சூப்பரான அப்டேட்டும் தற்போது கிடைத்துள்ளது.

அர்ஜுன் தாசும்
கமலுக்கு வில்லனாக இந்த படத்தில் பகத் ஃபாசில் நடிக்கப் போவது உறுதி ஆகி உள்ளது. விஜய்சேதுபதி இடம்பெறுவாரா? என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. இந்நிலையில், நடிகர் அர்ஜுன் தாஸும் விக்ரம் படத்தில் நடிக்கப் போவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ள தகவல் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ரொம்ப பிடிக்கும்
நடிகர் அர்ஜுன் தாஸின் தனித்துவமான நடிப்பு இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு மிகவும் பிடிக்குமாம். அதனால் தான் தொடர்ந்து தனது படங்களில் அர்ஜுன் தாஸை நடிக்க வைத்து வருகிறார். நடிகர் ரகுவரனை போல வித்தியாசமான குரல் வளம் மற்றும் அவரை போலவே வில்லத்தனமும் இவருக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











