நான்கு வருட போராட்டம்.. கைதி ரிலீசால் உற்சாகத்தில் அர்ஜுன் தாஸ்!
தீபாவளிக்கு வெளியாகவுள்ள கைதி படத்தின் வில்லன் நடிகர் அர்ஜுன் தாஸ், கும்கி 2 மற்றும் அந்தகாரம் படங்களின் ரிலீசுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.
சென்னை: ரேடியோ ஜாக்கியாக இருந்து நடிகராக மாறியுள்ளார் அர்ஜுன் தாஸ். இளம் நடிகரான இவர் கும்கி 2 மற்றும் கைதி படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும், நாயகனாக நடித்திருக்கும் அந்தகாரம் படத்தின் ரிலீசுக்காகவும் காத்துக் கொண்டிருக்கிறார்.
மூன்று படங்களும் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், சந்தோஷத்தில் இருக்கிறார் அர்ஜுன் தாஸ்.

ஆர்ஜே டு வில்லன்
பிரபல தனியார் ரேடியோ சேனலில் ஆர்ஜேவாக வேலை செய்து வந்த அர்ஜுன் தாஸ், சினிமா உலகில் நல்ல நடிகராக வர வேண்டும் என கடந்த 4 ஆண்டுகளாக போராடி வருகிறார்.
பிரபு சாலமனின் கும்கி 2 மற்றும் லோகேஷ் கனகராஜின் கைதி ஆகிய இரண்டு படங்களிலும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளாராம் அர்ஜுன் தாஸ்.

ஹீரோ ஆகணும்னு தான் ஆசை
சினிமா என்றாலே வீட்டில் வேண்டாம் என்று தடுத்த நிலையில், பல போராட்டங்களை சந்தித்து சினிமாவிற்குள் நுழைந்த அர்ஜுன் தாஸுக்கு பெரிய இயக்குநர்களான பிரபு சாலமன் மற்றும் லோகேஷ் கனகராஜ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஆனால், அந்த படங்களில் நெகட்டிவ் கதாபாத்திரங்களே அமைந்துள்ளன. ஆனால், ஹீரோவாக வேண்டும் என்பது தான் அர்ஜுனின் அடிமனது ஆசையாம்.

கனவு பலித்தது
வில்லன் கதாபாத்திரம் என்றாலும் தனது நடிப்பு ஆற்றலால் கைதி மற்றும் கும்கி 2 படங்களில் வெறித்தனமாக நடித்துள்ளார். இவரது நடிப்பை கண்டு அசந்து போன அறிமுக இயக்குநர் விக்னராஜன், தான் இயக்கும் சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் படமான அங்ககாரம் படத்தில் அர்ஜுன் தாஸை நாயகனாக நடிக்க வைத்துள்ளார்.

ரிலிசுக்காக வெயிட்டிங்
நான்கு ஆண்டுகள் சினிமாவில் கடும் உழைப்பை போட்டு நடித்து வரும் அர்ஜுன் தாஸ், நடித்துள்ள ஒரு படமும் இதுவரையில் வெளியாகவில்லை. வரும் தீபாவளிக்கு கார்த்தியின் கைதி படம் வெளியாகவுள்ள நிலையில், அந்த படத்திற்கு கிடைக்கப்போகும் வரவேற்பு தனது அடுத்த அடுத்த பட ரிலீசுக்கு உதவியாகவும் உறுதுணையாகவும் இருக்கும் என அர்ஜுன் தாஸ் காத்துக் கொண்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











