Con City Box Office: அர்ஜுன் தாஸ் ஸ்கேம் பண்ணி கல்லா கட்டினாரா? இல்லையா?.. கான் சிட்டி 2 நாள் வசூல்!

சென்னை: கடந்த வாரம் வெளியான விஜய் ஆண்டனி, சுவாசிகா நடித்த நூறு சாமி திரைப்படம் பெரிதாக வசூல் வேட்டை நடத்த முடியாத நிலையில், இந்த வாரம் அர்ஜுன் தாஸ், அன்னா பென் நடிப்பில் பக்கா ஸ்கேம் விழிப்புணர்வு படமாக வெளியான 'கான் சிட்டி' திரைப்படமாவது கல்லா கட்டியது என்று பார்த்தால் பெரிய 'நோ' என்கிறது பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள்.

அர்ஜுன் தாஸ் ஹீரோவாக தனது திறமையை இந்த படத்தில் பக்காவாக வெளிக்காட்டினாலும், இதற்கு முன்னதாக அவர் நடிப்பில் வெளியான படங்கள் எல்லாம் சொதப்பிய நிலையில், முதல் நாள் ஓபனிங் பெரிதாக இல்லை என்கின்றனர்.

Arjun Das starrer Con City Day 2 Box Office Collection Reports are very dull
Photo Credit:

மேலும், 2வது நாளான இன்று பாக்யராஜ் மரணம் கான் சிட்டி படத்துக்கும் இந்த வாரம் வெளியான படங்களின் வசூலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர்.

கான் சிட்டி எப்படி இருக்கு?: லக்கி பாஸ்கர் மற்றும் டாக்டர் படங்களின் கலவை போலவே கான் சிட்டி படம் ஸ்கேம் மற்றும் குழந்தையை காப்பாற்ற குடும்பமே சேர்ந்து போடும் டிராமா கதையாக உருவாகியுள்ளது. கமர்ஷியலாகவும் காமெடி கலந்தும் உருவாகியுள்ள இந்த படம் கண்டிப்பாக தியேட்டருக்குச் சென்று படம் பார்க்கும் ரசிகர்களை கடைசி வரை என்டர்டெயின் செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்துக்கு மக்கள் மத்தியில் எந்தளவுக்கு வரவேற்பு உள்ளது என்பதில் தான் பெரிய கேள்விக்குறி உருவாகியுள்ளது என்கின்றனர்.

முதல் நாள் வசூல்: ஹரிஷ் யுவராஜ் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி, விடிவி கணேஷ், அருள் தாஸ், அகிலன் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளம் நடித்த கான் சிட்டி திரைப்படம் ஜூன் 26ம் தேதியான நேற்று திரையரங்குகளில் வெளியானது. முதல் நாளில் அதிகபட்சமாக வெறும் 75 லட்சம் மட்டுமே இந்த படம் வசூல் செய்தது.

2வது நாள் வசூல்: பாக்யராஜ் மறைவு செய்தியால் ரசிகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், தர்மன் உள்ளிட்ட பல படங்களின் ஷூட்டிங்கும் இன்று கேன்சல் செய்யப்பட்டது. தியேட்டர்களிலும் பெருமளவில் மக்கள் படங்களை பார்க்க வரவில்லை என ரிப்போர்ட்டுகள் வெளியாகி உள்ளன. இதுவரை சுமார் 27 லட்சம் வரை மட்டுமே வசூல் வந்திருப்பதாக சாக்னிக் தகவல் தெரிவித்துள்ளது. மாலை மற்றும் இரவு நேர ஷோக்களுக்கு கூட்டம் வந்தால் தான் அதிகபட்சமாக 50 முதல் 60 லட்சம் வரை வசூல் வரும் என்றும் எப்படி இருந்தாலும் இது மிகவும் குறைவு என்றே கூறுகின்றனர்.

நாளை வசூல் அதிகரித்தால் மட்டுமே: கான் சிட்டி திரைப்படம் ஃபன் கியராண்டி என்று கூறப்படும் நிலையில், நாளை ஞாயிற்றுக்கிழமை வசூல் அதிகரித்தால் மட்டுமே படம் பாக்ஸ் ஆபீஸில் தப்பிக்கும் என்கின்றனர். அங்கீகாரம், அந்தரன், ஹார்ட்டின் என மேலும், பல படங்கள் இந்த வாரம் வந்த நிலையில், அதன் நிலைமை எல்லாம் இதை விட படுமோசம் என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X