EB ஆபிஸ்ல மட்டும் கரன்ட் கட் ஆகாதா?.. ‘கான் சிட்டி’ டிரைலர் ரிலீஸ்.. ஏகப்பட்ட ஃபன் கியாரண்டி!
சென்னை: ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அன்னா பென், வடிவுக்கரசி, ராதாரவி, விடிவி கணேஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள கான் சிட்டி படம் அடுத்த வாரம் திரைக்கு வருகிறது. இந்நிலையில், இன்று அதன் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில், வெளியான டிரைலர் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பேசு பொருளாகவே மாறியுள்ளது.
அர்ஜுன் தாஸ் கைதி படத்தில் வில்லனாக மிரட்டினார். மாஸ்டர் படத்திலும் அவருக்கு நெகட்டிவ் ரோல் தான். அதன் பின்னர் படிப்படியாக ஹீரோவாக நடித்து வருகிறார். கான் சிட்டி படம் அவருக்கு சரியான வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் டிரைலர் முழுக்கவே நெல்சன் படங்களில் வருவது போன்ற டார்க் காமெடி காட்சிகள் கச்சிதமாக பொருந்தியுள்ளது. முழுப் படமாக பார்க்கும் போதும் இதே போல படம் இருந்தால் கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை போல ஹிட் அடிப்பது உறுதி.
கான் சிட்டி டிரைலர் ரிலீஸ்: அர்ஜுன் தாஸ் அயன் படத்தில் சூர்யா வருவது போல வித விதமான கெட்டப்புகளை போட்டு பல சம்பவங்களை படத்தில் செய்துள்ளார் என்று தெரிகிறது. ஆனால், விடிவி கணேஷ் பக்கத்தில் அமர்ந்துக் கொண்டு விடிவி கணேஷ் வாய்ஸில் பேசும் காட்சி குபீர் சிரிப்பை வரவழைத்து விடுகிறது. இவர் தான் படத்தின் டைரக்டர், ஹீரோ, லிரிக்ஸ் கூட எழுதுவார் என வடிவுக்கரசி சொல்லும் இடமும் கன்ட்ரோல் பண்ண முடியாமல் சிரிக்க முடிகிறது. டிரைலராக கான் சிட்டி கலக்கலாக உள்ளது.
அன்னா பென் அழகு: கொட்டுக்காளி, கல்கி 2898 ஏடி படங்களில் நடித்த மலையாள நடிகை அன்னா பென் ஹீரோயினாக நடித்துள்ள கான் சிட்டி படத்தின் டிரைலரில் அழகாக வந்து செல்கிறார். அர்ஜுன் தாஸ் உடன் இணைந்து இவரும் பார்ட்னர் இன் தி கிரைம் செய்யப் போகிறார் என்றே தெரிகிறது. இவர்களின் மகனை கடத்தி வைத்துக் கொண்டு ஒரு க்ரூப் மிரட்ட, அதிலிருந்து தப்பிக்க இவர்கள் போடும் பிளான் என்ன என்பதை ஒரு மணி ஹெயிஸ்ட் பாணியில் படமாக்கி உள்ளது போல தெரிகிறது. அந்த EB காமெடி சிரிக்க வைத்ததை விட சோஷியல் மீடியாவில் தற்போது ஏகப்பட்ட விவாதங்களை கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications