கொரோனா பரவாமல் தடுக்க.. கட்டாயம் கை கழுவுங்க ..அர்ஜுன் தாஸ்!
சென்னை : கொரோனா பரவாமல் தடுக்க கட்டாயம் கை கழுவுங்க என்று அர்ஜுன் தாஸ் கூறியுள்ளார்.
Recommended Video
கொரோனா அச்சுறுத்தலால் உலகமே மிரண்டு போயிருக்கிறது. உலக நாடுகள் அனைத்தும் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொண்டுள்ளன இந்திய அரசு 21நாட்கள் ஊரடங்கை உத்தரவாக்கியுள்ளது.

இந்த நிலையில் கைதி படத்தில் வில்லனாக அசத்தி தற்போது மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கும் அர்ஜுன் தாஸ் கொரோனா தொற்றுக்கு எதிராக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறார் .
கொரோனா தொற்று மிகவும் முக்கியமான விஷயம் அதுக்கு எதிராக நாம் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். அதில் மிக முக்கியமான விஷயம் நம் கைகளை நாம் சுத்தமாக வைத்திருப்பது என்று கூறியுள்ளார்.
இதில் மிக முக்கியமானது சானிடைசர் போட்டு நம் கைகளை கழுவுவது ஆகும். சானிடைசர் அனைத்து மருந்து கடைகளிலும் கிடைக்கும் அதனால் அதை வாங்கி கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார். நீங்கள் வெளியே சென்று வந்த பின் கட்டாயம் சானிடைசர் ஊற்றி கைகளை கழுவுங்கள் அதை கட்டாயமாக்குங்கள் என்பதை வலியுறுத்தி இருக்கிறார் அர்ஜுன்தாஸ்.

சானிடைசர் வாங்க முடியவில்லை என்றால் குறைந்தது சோப்பு போட்டு கைகளை கழுவுங்கள். அதுவே போதுமானது கைகளை சுத்தமாக வைத்து கொள்வது மிகவும் அவசியமானது என்று கூறியிருக்கிறார் அர்ஜுன்தாஸ் .
அர்ஜுன் தாஸ் தனது குரலால் பிரபலமடைந்த ஒரு நடிகர். இவரின் குரலை எங்கு கேட்டாலும் ரசிகர்கள் உற்சாகமாகி விடுவார்கள் அந்த அளவுக்கு இவரின் குரல் ரசிகர்களை அதிர வைக்க கூடியது. தற்போது கொரோனா பற்றிய விழிப்புணர்வை தானே முன் வந்து கூறியுள்ளார் இது பெரிய அளவில் மக்களை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசும் கை கழுவும் அவசியத்தை மக்களுக்கு பல வகையில் விழிப்புணர்வாய் கொடுத்து வருகிறது. யோகிபாபு மற்றும் நிரோஷாவை வைத்து குறும்படம் எடுத்தது மேலும் பல முக்கிய பிரபலங்களை அழைத்து மக்களிடம் பேச சொல்லியது. இதன் தொடர்ச்சியாக பல முக்கிய நடிகர்களும் தானாக முன் வந்து தொடர் விழிப்புணர்வில் ஈடுபட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











