அடேங்கப்பா விடாமுயற்சி படத்துக்கு அர்ஜுன் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?.. செம கெத்து போங்க

சென்னை: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் விடாமுயற்சி படத்தில் கமிட்டானார். படத்தின் ஷூட்டிங் தொடங்கினாலும் ரொம்பவே தாமதமாக நடந்தது. இதனால் படம் ட்ராப்பாகிவிட்டதோ என்றெல்லாம் பேச்சுக்கள் எழுந்தன. ஆனால் அதெல்லாம் உண்மையில்லை என்பது பின்னர் உறுதியானது. படமானது பிப்ரவரி ஆறாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்தச் சூழலில் படத்தில் நடித்திருக்கும் அர்ஜுன் வாங்கியிருக்கும் சம்பள தொகை குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

அஜித்தின் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் போட்டிக்கு களமிறங்கிய விஜய்யின் வாரிசை வாரி சுருட்டியது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வாரிசு படத்தைவிடவும் ஒருபடி மேலேதான் துணிவு இருந்ததாக பலரும் கூறினார்கள். அந்தப் படத்தைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க அஜித் கமிட்டானார். ஆனால் அந்தப் படம் ட்ராப்பாகிவிட்டதால் மகிழ் திருமேனி லைகா தயாரிப்பில் அஜித்தை வைத்து இயக்குவதற்கு கமிட்டானார்.

vidaamuyarchi ajith

விடாமுயற்சி: அதன்படி படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டது. இதில் அஜித்துடன் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, ஆரவ் என பலர் கமிட்டானார்கள். முதலில் நீரவ் ஷா சில நாட்கள் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை அவருக்கு பதிலாக ஓம் பிரகாஷ் கமிட்டானார். அதுமட்டுமின்றி ஆர்ட் டைரக்டர் மிலனும் உயிரிழந்தார். இப்படி பல காரணங்களால் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் ரொம்பவே தள்ளிப்போனது.

படத்தின் அப்டேட்: ஒருகட்டத்தில் விடாமுயற்சி படத்தை விட்டுவிட்டார்களோ என்றெல்லாம் ரசிகர்கள் பேசினார்கள். ஆனால் அப்படி எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமாக படத்தின் டீசர் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. டீசரில் எந்தவிதமான வசனமும் இல்லையென்றாலும் மகிழ் திருமேனியின் மேக்கிங், அஜித்தின் ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ், படத்தின் லொக்கேஷன்கள், அனிருத்தின் இசை ஆகியவை அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இருந்தாலும் பொதுவான ரசிகர்களிடம் டீசருக்கு கலவையான விமர்சனமே கிடைத்தது. அதேபோல் ட்ரெய்லரும் சுமாரான வரவேற்பையே பெற்றது.

பிரேக் டவுன்: இதற்கிடையே விடாமுயற்சி திரைப்படம் பிரேக் டவுன் என்கிற ஹாலிவுட் படத்தின் காப்பி என்று கூறப்பட்டது. மேலும் பிரேக் டவுன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் 150 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு லைகா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகவும் ஒரு தகவல் வட்டமடித்தது. ஆனால் அவ்வளவு பணத்துக்கு ஒத்துவராத லைகா நிறுவனம் 30 கோடி ரூபாயை தர சம்மதித்திருப்பதாகவும் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.

அர்ஜுன் சம்பளம்: இந்நிலையில் விடாமுயற்சி படத்தில் நடிப்பதற்கு அர்ஜுன் வாங்கியிருப்பதாக ஒரு சம்பள தொகை கூறப்படுகிறது. அதன்படி அவர் இந்தப் படத்துக்காக ஐந்து கோடி ரூபாய்வரை சம்பளம் பெற்றிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதற்கு முன்னதாக அஜித்தும், அர்ஜுனும் மங்காத்தா திரைப்படத்தில் சேர்ந்து நடித்தார்கள். அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதேபோல் விடாமுயற்சி திரைப்படமும் மெகா ஹிட்டாகும் என்று ரசிகர்கள் நம்பிக்கையில் இருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X