கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற ஆம்புலன்ஸ் டிரைவராக மாறிய பிரபல நடிகர்.. குவிகிறது பாராட்டு!

பெங்களூரு: பிரபல கன்னட நடிகர் அர்ஜுன் கவுடா கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற ஆம்புலன்ஸ் டிரைவராக மாறியுள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

Recommended Video

பிரபல நடிகர் Ambulance Driver-ஆக மாறியுள்ளார் | Arjun Gowda

கர்நாடகாவில் கடந்த வியாழனன்று, 35,024 பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சினிமா பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த அளவுக்கு மக்களுக்காக உதவ முன் வந்துள்ளனர்.

கொரோனா சுனாமி

கொரோனா சுனாமி

இந்தியாவில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சுனாமி போல கொரோனா பாதிப்பு மக்களை துவம்சம் செய்து வருகிறது. நாடு முழுவதும் நாள் தோறும் 4 லட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆயிரக் கணக்கில் தினமும் கொரோனா வைரஸுக்கு பொதுமக்கள் முதல் பிரபலங்கள் வரை பலியாகி வரும் கோர சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன.

ஆம்புலன்ஸ் டிரைவராக

ஆம்புலன்ஸ் டிரைவராக

இந்நிலையில், பிரபல கன்னட நடிகர் அர்ஜுன் கவுடா கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ் டிரைவராக மாறி உள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்ட போஸ்ட் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

முறையான பயிற்சியுடன்

முறையான பயிற்சியுடன்

Project Smile Trust எனும் தனது சொந்த ஆம்புலன்ஸ் சேவையை மக்களுக்காக தொடங்கி உள்ளார் நடிகர் அர்ஜுன் கவுடா. மேலும், சரியான பாதுகாப்பு நெறிமுறைகளுடனும் முறையான பயிற்சியை பெற்ற பின்னரே தான் ஆம்புலன்ஸ் டிரைவராக மாறி உள்ளதாகவும், கர்நாடக மக்கள் நாள் தோறும் கொரோனா நோயால் பாதிக்கப்படுவதை பார்க்க முடியாமல் தான் இப்படி ஆம்புலன்ஸ் டிரைவராக மாறியுள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

குவிகிறது பாராட்டு

குவிகிறது பாராட்டு

ஒடியா, ரஸ்டம், ஆ த்ருஷ்யா மற்றும் புனித் ராஜ்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான யுவரத்னா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இளம் நடிகர் அர்ஜுன் கவுடா ஆம்புலன்ஸ் டிரைவராக மாறி கொரோனா நோயாளிகளுக்காக உதவி செய்து வருவதை அறிந்த பிரபலங்களும் ரசிகர்களும் அவரை பாராட்டி வருகின்றனர்.

எச்சரிக்கையாக இருங்க

எச்சரிக்கையாக இருங்க

மேலும், அவரது ரசிகர்கள் நீங்கள் மிகவும் பாதுகாப்புடனும் எச்சரிக்கையாகவும் இருங்க என்றும் உங்களின் இந்த சேவை இளைஞர்களுக்கு நிச்சயம் உத்வேகத்தை கொடுக்கும் என்றும் பாராட்டுக்களையும் எச்சரிக்கையையும் சேர்த்தே கூறி வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில், தன்னால் முடிந்த சிறு உதவியை இன்னும் சில மாதங்களுக்கு தொடர்ந்து செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X