எப்படி இருந்த நான்.. இப்படி ஆகிட்டேன்.. சிக்ஸ் பேக் வைத்த போனி கபூர் மகன் அர்ஜுன் கபூர்!

சென்னை: சிம்பு, அஜித் என நடிகர்கள் உடல் எடையை குறைத்து செம ஃபிட்டாக மாறி வரும் நிலையில், தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூரும் தனது தோற்றத்தை அதிரடியாக மாற்றி உள்ளார்.

பாலிவுட்டின் இளம் நாயகனாக வலம் வரும் நடிகர் அர்ஜுன் கபூர் தனது தொப்பை உடம்பை குறைந்து சிக்ஸ்பேக் வைத்துள்ள டிரான்ஸ்ஃபர்மேஷன் புகைப்படங்களை வெளியிட்டு கெத்துக் காட்டி உள்ளார்.

இதற்காக கடந்த 15 மாதங்கள் கடும் உழைப்புகளை போட்டுள்ளேன் என அர்ஜுன் கபூர் பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் போஸ்ட் ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

போனி கபூர் மகன்

போனி கபூர் மகன்

தமிழில் நேர்கொண்ட பார்வை, வலிமை, நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் போனி கபூரின் முதல் மனைவி மோனா செளரி கபூரின் மகன் தான் அர்ஜுன் கபூர். இரண்டாவதாகத் தான் நடிகை ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொண்டார் போனி கபூர். ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரும் பாலிவுட்டில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

அர்ஜுன் கபூர்

அர்ஜுன் கபூர்

உதவி இயக்குநராக பாலிவுட்டில் பணியாற்றி வந்த அர்ஜுன் கபூரை கடந்த 2012ம் ஆண்டு இஸாக்ஜாதே திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகம் செய்தனர். தொடர்ந்து அவுரங்கஸிப், கன் டே, 2 ஸ்டேட்ஸ், ஃபைண்டிங் ஃபேனி, கி அண்ட் கா, ஹாஃப் கேர்ள் ஃபிரெண்ட், பானிபட் என பல படங்களில் அர்ஜுன் கபூர் நடித்துள்ளார்.

வயதான நடிகையுடன் காதல்

வயதான நடிகையுடன் காதல்

ஷாருக்கானின் உயிரே படத்தில் இடம்பெற்ற 'தக்க தைய்யா' பாடலில் நடனமாடிய கவர்ச்சி கன்னி மலைகா அரோராவுடன் காதலில் விழுந்த அர்ஜுன் கபூர் கடந்த 2016ம் ஆண்டு முதல் அவருடன் பார்ட்னராக திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார். மலைகா அரோராவுக்கு 48 வயதாகிறது. அர்ஜுன் கபூருக்கு 36 வயதாகிறது.

சிக்ஸ் பேக்

சிக்ஸ் பேக்

நல்ல குண்டா அழகா இருந்த அர்ஜுன் கபூர் திடீரென ஃபிட்டான உடற்கட்டுக்கு மாற வேண்டும் என நினைத்து கடினமாக ஜிம்மிலேயே வொர்க்கவுட் செய்து தற்போது சிக்ஸ் பேக் உடம்புக்கு மாறி ஒட்டுமொத்த பாலிவுட் பிரபலங்களையும் தனது ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.

15 மாத உழைப்பு

15 மாத உழைப்பு

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இந்த ஆண்டு மே மாதம் வரை 15 மாதங்கள் கடுமையான உடற்பயிற்சிக்கு கிடைத்த பலன் தான் இது என தொப்பை உடம்பில் இருந்து எப்படி சிக்ஸ்பேக் உடம்பிற்கு மாறினேன் என்கிற டிரான்ஸ்ஃபர்மேஷன் புகைப்படங்களையும், அது தொடர்பான கேப்ஷனையும் அர்ஜுன் கபூர் கொடுத்துள்ளார்.

ஷாக்கான பிரபலங்கள்

ஷாக்கான பிரபலங்கள்

ரகுல் ப்ரீத் சிங், பரிணீத்தி சோப்ரா, ஹூமா குரேஷி, க்ரித்தி சனோன், தியா மிர்ஸா உள்ளிட்ட பாலிவுட் நடிகைகள் பலரும் லைக் மற்றும் கமெண்ட் போட்டு அர்ஜுன் கபூரின் இந்த அதிரடி டிரான்ஸ்ஃபர்மேஷனை பார்த்து ஷாக் ஆகி உள்ளனர். நடிகர்கள் ரன்வீர் சிங் மற்றும் வருண் தவான் ஆகிய பாலிவுட் பிரபலங்களும் கமெண்ட் பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X