50 வயது காதலியை கழட்டி விட்ட அர்ஜுன் கபூர்.. பிரேக்கப் தான் ஒரே தீர்வு.. மலைகா அரோராவும் முடிவு?

மும்பை: பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் தனது காதலி மலைகா அரோராவுடன் படு நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு வந்த நிலையில், திடீரென இருவரும் பிரேக்கப் செய்து பிரிந்து விட்டதாக உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன.

உயிரே படத்தில் ஷாருக்கானுடன் தக்க தையா தையா பாடலில் குத்தாட்டம் போட்டு சர்வதேச அளவில் பிரபலமானவர் நடிகை மலைகா அரோரா. ஏற்கனவே அர்பாஸ் கான் எனும் பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளரை இவர் காதலித்து திருமணம் செய்த நிலையில், மனக்கசப்பு காரணமாக இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்தனர்.

Arjun Kapoor Malaika Arora breakup

சமீபத்தில் தனது 20 வயது மகனுடன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மலைகா அரோரா மகனிடம் விர்ஜினிட்டியை எப்போ இழந்த? என படுமோசமான கேள்வியை கேட்டார். பதிலுக்கு மலைகாவை மடக்க உங்களுக்கு எப்போ 2ம் திருமணம் எனக் கேட்டு மடக்கினார்.

12 வயது வித்தியாசம்: தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூர் மற்றும் மலைகா அரோரா ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். அர்ஜுன் கபூரை விட மலைகா அரோராவுக்கு 12 வயது அதிக வயது வித்தியாசம் இருந்தது. இருவரும் காதலிக்கத் தொடங்கியதில் இருந்தே பாலிவுட்டில் ஏகப்பட்ட ட்ரோல்கள் வெடித்தன. அடிக்கடி இருவரும் பிரேக்கப் செய்து விட்டதாக வதந்திகள் பரவி வந்த நிலையில், தற்போது உறுதியாகவே இருவரும் பிரிந்து விட்டனர் என்றும் இனிமேல் சேர்ந்து வாழப் போவதில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

50 வயசாகிடுச்சு: கடந்த 2019ம் ஆண்டு அர்ஜுன் கபூரை மலைகா அரோரா காதலித்து வருவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இருவரும் இன்ஸ்டாகிராமில் படு நெருக்கமாக முத்த மழை பொழியும் போட்டோக்களும் பார்ட்டிகளுக்கு செல்லும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்தனர். 40 பிளஸ் வயதில் மலைகா அரோரா இருந்தவரை காதலித்து வந்த அர்ஜுன் கபூர் சமீபத்தில் 50 வயதை மலைகா அரோரா கடந்ததும் கழட்டி விட்டாரா என பாலிவுட் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

20 வயது மகன்: 1998ம் ஆண்டு அர்பாஸ் கானை திருமணம் செய்து கொண்ட நடிகை மலைகா அரோரா கடந்த 2017ல் அர்ஜுன் கபூர் உடனான காதல் காரணமாக அர்பாஸ் கானை விவாகரத்து செய்ததாக தகவல்கள் வெளியாகின. அர்பாஸ் கான் மலைகா அரோரா தம்பதியினருக்கு 20 வயதில் அர்ஹான் கான் எனும் மகன் உள்ளார். அமெரிக்காவில் படித்து முடித்து விட்டு மும்பை திரும்பிய மகன் தற்போது அம்மாவிடமே வசித்து வருவதாக கூறுகின்றனர்.

கடைசி காதலர் தினம்: கடந்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் வெளியிட்டுள்ள போஸ்ட்டில் தனது காதலி மலைகா அரோராவை செம டைட்டாக கட்டி அணைத்து காதல் பொங்க வெளியிட்ட போட்டோவை இன்ஸ்டாவில் ஷேர் செய்திருந்தார். ஆனால், இந்த ஆண்டு எந்தவொரு கொண்டாட்டமும் இல்லாமல் சில மாதங்களாகவே இருவரும் புகைப்படங்களை வெளியிடாமல் இருந்து வந்த நிலையில், தற்போது பிரேக்கப் ஆகி பிரிந்து விட்டதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், இதுதொடர்பாக எந்தவொரு கருத்தையும் அவர்கள் தெரிவிக்க விரும்பவில்லை என்றும் கூறுகின்றனர்.

ஸ்ருதிஹாசன் பிரேக்கப்: சமீபத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் தனது 2வது காதலர் சாந்தனு ஹசாரிகாவை பிரேக்கப் செய்து பிரிந்தார். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தனது மனைவி சைந்தவியை விவாகரத்து செய்ய முடிவெடுத்து பிரிந்து விட்டார். தொடர்ந்து சினிமா பிரபலங்கள் பிரேக்கப் முடிவுகளை எடுத்து வருவதற்கு பின்னணியில் என்ன காரணம் இருக்கிறது என ரசிகர்கள் குழம்பிப் போயுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X