பிரேக்கப்பா.. அதுக்கு வாய்ப்பே இல்லை ராஜா.. 50 வயது காதலியுடன் அர்ஜுன் கபூர் வேறலெவல் டேட்டிங்!
மும்பை: தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும் பாலிவுட் நடிகருமான அர்ஜுன் கபூர் சீனியர் நடிகை மலைகா அரோராவை பிரேக்கப் செய்து விட்டதாக பரபரப்பு தகவல்கள் நேற்று பாலிவுட்டில் காட்டுத்தீயாக கொழுந்து விட்டு எரிந்தது.
மேலும், விவாகரத்தான நடிகையுடன் அர்ஜுன் கபூர் வெளியே சுற்றி வருகிறார் என்றும் விரைவில் அவருடன் தான் திருமணம் என்றும் கொளுத்திப் போட்டு இருந்தனர்.

ஆனால், அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை ராஜா என இன்று மீண்டும் தனது காதலி மலைகா அரோராவுடன் மும்பையில் வெளிப்படையாக ஒன்றாக சுற்றி ஹேட்டர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் அர்ஜுன் கபூர்.
50 வயது காதலி: பாலிவுட்டின் யங் ஹீரோவாக வலம் வரும் அர்ஜுன் கபூர் உயிரே உள்ளிட்ட படங்களில் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்ட பிரபல நடிகை மலைகா அரோராவை காதலித்து வருகிறார். ஏற்கனவே விவகாரத்தான மலைகா அரோராவுக்கு 20 வயதில் மகன் இருக்கும் நிலையில், போனி கபூர் மகன் அர்ஜுன் கபூரை காதலித்து வருவது பாலிவுட்டில் தொடர்ந்து பல சர்ச்சைகளை கிளப்பி வருகிறது.
அடிக்கடி இருவரும் பிரிந்து விட்டதாகவும், மலைகா ஒருவரை காதலிக்கிறார், அர்ஜுன் கபூர் இன்னொரு நடிகையை திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார் என பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பி வருகின்றனர். அதற்கு இவர்களது இன்ஸ்டாகிராம் போஸ்ட் விளையாட்டுகளும் ஒரு காரணமாக அமைந்து விடுகின்றன.
பிரேக்கப் வதந்திக்கு முற்றுப்புள்ளி: காதலுக்கு வயது வித்தியாசம் எல்லாம் இல்லை என்பதை பாலிவுட்டில் பல பிரபலங்கள் ஓபன் ஸ்டேட்மென்ட்டாகவே சொல்லி வந்தாலும், அதில், குறிப்பாக 10 வயதுக்கும் அதிக வயது கொண்ட மலைகா அரோராவை நடிகர் அர்ஜுன் கபூர் காதலித்து வருவதன் மூலம் அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார்.
கடந்த ஒரு வாரமாக அர்ஜுன் கபூருக்கும் கடந்த மாதம் விவாகரத்தான நடிகை குஷா கபிலுக்கும் காதல் உருவாகி விட்டதாக கிளம்பிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சன் டே அதுவுமாக தனது காதலி மலைகா அரோராவுடன் மும்பையில் முக்கிய வீதிகளில் இருவரும் ஒன்றாக வலம் வந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இனிமேல் இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அர்ஜுன் கபூர் - மலைகா அரோரா எப்போதுமே பிரேக்கப் செய்யமாட்டார்கள் என அவர்களது ரசிகர்கள் அந்த வீடியோவை ஷேர் செய்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











