இந்த வார்த்தையை கேட்க இன்று ஸ்ரீதேவி உயிரோடு இல்லையே
Recommended Video

மும்பை: காபி வித் கரண் நிகழ்ச்சியில் நடிகர் அர்ஜுன் கபூர் கூறிய வார்த்தையை கேட்க ஸ்ரீதேவி உயிருடன் இல்லாமல் போய்விட்டாரே.
நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூருக்கும், அவரது முதல் மனைவிக்கும் பிறந்த பிள்ளைகள் அர்ஜுன் கபூர், அன்சுலா கபூர். பாலிவுட் படங்களில் நடித்து வரும் அர்ஜுன் கபூருக்கு ஸ்ரீதேவியை சுத்தமாக பிடிக்காது.
ஸ்ரீதேவி என் அப்பாவின் மனைவி, அவ்வளவு தான் என்று பல முறை பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.

பயம்
ஸ்ரீதேவிக்கு அர்ஜுன் கபூர் தன் மீது கோபமாக இருப்பது பயத்தை அளித்தது. ஆனால் ஸ்ரீதேவி இறந்த பிறகு அர்ஜுன் ஆளே மாறிவிட்டார். ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி மற்றும் குஷியை தனது சொந்த தங்கைகளாகவே பார்க்கிறார். அவர்களுடன் பாசமாக நடந்து கொள்கிறார். அண்ணன் கிடைத்த சந்தோஷத்தில் உள்ளனர் ஜான்வியும், குஷியும்.

அர்ஜுன்
காபி வித் கரண் நிகழ்ச்சியில் அர்ஜுன் கபூரும், ஐான்வியும் கலந்து கொண்டு பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தனர். அப்பொழுது ஜான்வியும், அர்ஜுனும் பேசியதை பார்த்தால் அவர்களுக்கு இடையே அவ்வளவு ஒற்றுமை இருப்பது தெரிய வந்தது. அந்த நிகழ்ச்சியில் அர்ஜுன் ஸ்ரீதேவி பற்றி கூட பேசினார்.

புகழாரம்
ஒரு காலத்தில் ஸ்ரீதேவி பற்றி பேச்சு எடுத்தாலே கடுப்பான அர்ஜுன் கபூர் காபி வித் கரண் நிகழ்ச்சியில் அவரை ஒரு லெஜன்ட் என்று புகழ்ந்தார். இதை மட்டும் ஸ்ரீதேவி கேட்டிருந்தால் நிச்சயம் மகிழ்ச்சி அடைந்திருப்பார். நானும், அன்சுலாவும் தாயை இழந்தவர்கள். அதனால் அந்த கஷ்டம் எங்களுக்கு தெரியும். ஜான்வியும், குஷியும் கஷ்டப்பட விட மாட்டோம் என்றார் அர்ஜுன்.

எதிர்பார்ப்பு
என் அப்பா பட தயாரிப்பாளர் என்பதால் நான் நடிகரான போது எந்த அழுத்தமோ, எதிர்பார்ப்போ இல்லை. ஆனால் ஜான்வியின் அம்மா நடிகை என்பதால் அவர் நடிக்க வந்த போது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதுவும் அவரின் அம்மா லெஜன்ட. அவரை பார்த்து நடிக்க வந்தவர்கள் பலர் என்று அர்ஜுன் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











