49 வயது காதலியை கட்டித் தழுவி காதலர் தின வாழ்த்து சொன்ன போனி கபூர் மகன்... செம ரொமான்ஸ் தான்!
மும்பை: பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் காதலர் தினத்தை முன்னிட்டு தனது காதலி மலைகா அரோராவுடன் படு நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு காதலர் தின வாழ்த்துக்களை கூறி உள்ளார்.
டிஸ்னி ஹாட்ஸ்டாரில் பாலிவுட் நடிகை மலைகா அரோரா தனது வாழ்வில் நடக்கும் அன்றாட விஷயங்களையே வெளிக்காட்டும் விதமாக மூவிங் வித் மலைகா அரோரா என்கிற ஓடிடி ஷோவை ஒளிபரப்பு வருகிறார்.
தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூர் மற்றும் மலைகா அரோரா ஒருவரை ஒருவர் காதலித்து வரும் நிலையில், காதலர் தின ஸ்பெஷல் போட்டோவை போட்டு பாலிவுட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளனர்.

49 வயது பாலிவுட் நடிகை
உயிரே படத்தில் இடம்பெற்ற தக்க தையா தையா பாடலில் குத்தாட்டம் போட்டு சர்வதேச அளவில் பிரபலமானவர் நடிகை மலைகா அரோரா. ஏற்கனவே அர்பாஸ் கான் எனும் பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளரை இவர் காதலித்து திருமணம் செய்த நிலையில், மனக்கசப்பு காரணமாக இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்தனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட்டின் இளம் நடிகர் அர்ஜுன் கபூரை மலைகா அரோரா காதலித்து வருகிறார்.

காதலுக்கு வயது தடையில்லை
காதலுக்கு வயது ஒரு தடையில்லை என ஏகப்பட்ட நட்சத்திர ஜோடிகள் நிரூபித்து வரும் நிலையில், 37 வயது அர்ஜுன் கபூர் 49 வயது மலைகா அரோராவை காதலித்து வருகிறார். இந்த வித்தியாசமான பாலிவுட் ஜோடியின் காதல் குறித்து ஏகப்பட்ட ட்ரோல்கள் வந்தாலும், இருவரும் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து தங்கள் காதலை வலுப்படுத்தி வருகின்றனர்.

20 வயது மகன்
1998ம் ஆண்டு அர்பாஸ் கானை திருமணம் செய்து கொண்ட நடிகை மலைகா அரோரா கடந்த 2017ல் அர்ஜுன் கபூர் உடனான காதல் காரணமாக அர்பாஸ் கானை விவாகரத்து செய்ததாக தகவல்கள் வெளியாகின. அர்பாஸ் கான் மலைகா அரோரா தம்பதியினருக்கு 20 வயதில் அர்ஹான் கான் எனும் மகன் உள்ளார். சமீபத்தில் அமெரிக்காவுக்கு படிக்க சென்ற மகனை அர்பாஸ் கான் மற்றும் மலைகா அரோரா இருவரும் ஜோடியாக வழியனுப்பினர். அப்போது தனது முன்னாள் கணவரை மலைகா அரோரா கட்டித் தழுவிய புகைப்படங்கள் வெளியாகின.

கட்டியணைத்து
காதலர் தினத்தை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போஸ்ட்டில் தனது காதலி மலைகா அரோராவை செம டைட்டாக கட்டி அணைத்து காதல் பொங்க வெளியிட்ட போட்டோவை இன்ஸ்டாவில் ஷேர் செய்து லைக்குகளை குவித்து வருகிறார் அர்ஜுன் கபூர்.

திருமணம் எப்போது
நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு படங்களை இயக்கிய தயாரிப்பாளர் போனி கபூரின் மகனான அர்ஜுன் கபூர் மலைகா அரோராவை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில், இந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொள்வார்களா? என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். தொடர்ந்து பாலிவுட்டில் நட்சத்திரங்களின் திருமணங்கள் நடைபெற்று வரும் நிலையில், அர்ஜுன் கபூர் - மலைகா அரோரா விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











