இதை எல்லாம் பார்க்க எங்க அம்மா இல்லையே: வாரிசு நடிகர் கவலை
மும்பை: என் அம்மா விரும்பியது போன்று இன்று நான் ஒரு ஆளாகிவிட்டேன். எனக்கென வீடு வாசல் உள்ளது. அவர் நான் எப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாரோ அப்படி ஆகியுள்ளேன். ஆனால் இதை எல்லாம் பார்க்க என் அம்மா இல்லையே என்று நடிகர் அர்ஜுன் கபூர் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான நிலையில் நடிகை ஸ்ரீதேவியை திருமணம் செய்தார். முதல் மனைவி மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு ஸ்ரீதேவியுடன் சென்றுவிட்டார்.
இந்நிலையில் இது குறித்து போனி கபூரின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூர் கூறும்போது,

ஸ்ரீதேவி
ஸ்ரீதேவி என் அப்பாவின் மனைவி. அவ்வளவு தான். அதற்கு மேல் ஒன்றும் கிடையாது. அவரின் மகள்களான ஜான்வி, குஷி என் தங்கைகள் கிடையாது.

ஜான்வி
ஜான்வி, குஷி ஆகியோரை நாங்கள் சந்தித்து பேசுவதே கிடையாது. அதனால் எங்களுக்குள் அண்ணன், தங்கை என்ற உறவு எதுவும் இல்லை. அவர்கள் என் தந்தையின் மகள்கள்.

அம்மா
எங்கள் தந்தை எங்களை விட்டுச் சென்ற பிறகு எனக்கும், என் தங்கை அன்ஷுலாவுக்கும் ஆதரவாக இருந்த அம்மாவும் இறந்துவிட்டார். என் தங்கை சிறுவயதில் பல கஷ்டங்களை அனுபவித்துவிட்டார்.

வெற்றி
என் அம்மா விரும்பியது போன்று இன்று நான் ஒரு ஆளாகிவிட்டேன். எனக்கென வீடு வாசல் உள்ளது. அவர் நான் எப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாரோ அப்படி ஆகியுள்ளேன். ஆனால் இதை எல்லாம் பார்க்க என் அம்மா இல்லையே என்றார் அர்ஜுன்.


Click it and Unblock the Notifications











