கொண்டாட அம்மா இல்லையே: அன்னையர் தினத்தில் ஏங்கிய ஹீரோ

By Siva

மும்பை: அன்னையர் தினத்தன்று நடிகர் அர்ஜுன் கபூரும், நடிகை ஜான்வியும் தாயை நினைத்து ஏங்கியுள்ளனர்.

அன்னையர் தினத்தன்று பாலிவுட் பிரபலங்கள் தங்களின் தாயுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தனர். சிலரோ தாயுடன் சேர்ந்து வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

Arjun Kapoor misses mother

தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூரும் வீடியோ வெளியிட்டார். உங்களுக்கு எல்லாம் அம்மா உங்களுடன் இருக்க ஆசிர்வதிக்கப்பட்டுள்ளீர்கள். அம்மாவை பெருமைப்படுத்துங்கள் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

என் அம்மாவை புகைப்படங்களில் மட்டுமே பார்க்க முடிகிறது, நிஜத்தில் முடியவில்லை என்று இறந்த தனது தாயை நினைத்து அவர் ஃபீல் பண்ணியுள்ளார். மேலும் ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வியும் அம்மா இல்லாமல் கவலை அடைந்துள்ளார்.

தன் சிறு வயதில் அம்மாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ஜான்வி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் ஜான்வியும், ஸ்ரீதேவியும் அவ்வளவு மகிழ்ச்சியாக காணப்படுகிறார்கள்.

தாயை இழந்து வாடும் ஜான்வி அவரின் தங்கை குஷிக்கு நடிகர் அர்ஜுன் கபூர் அதரவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தன் அப்பாவின் இரண்டாவது மனைவியான ஸ்ரீதேவியை பிடிக்காது என்பதை அர்ஜுன் பல பேட்டிகளில் தெரிவித்தார். ஆனால் ஸ்ரீதேவி இறந்த பிறகு அவரின் 2 மகள்களையும் தன் சொந்த தங்கைகள் போன்று பார்த்துக் கொள்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X