Don't Miss!
- News
பிரதமர் மோடி வருகை.. சென்னைவாசிகளே இந்த பக்கம் போகாதீங்க.. நெரிசலில் சிக்கவேண்டியிருக்கும்
- Sports
நிறைய தப்பு பண்ணிட்டோம்.. தோல்விக்கு பிறகு கலங்கிய ராகுல்.. துள்ளிகுதித்த டுபிளஸிஸ்
- Finance
சென்னை ஐஐடி நிறுவனத்துடன் இந்தியா சிமெண்ட்ஸ் ஒப்பந்தம்.. எதற்காக தெரியுமா..? #3D
- Technology
ரூ.300 விலைக்குள் இத்தனை சிறந்த Airtel, Vi திட்டங்களா? பட்ஜெட் விலையில் பெஸ்டான நன்மைகள்..
- Automobiles
மீண்டும் எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... ஆனா இதுக்கு ஸ்கூட்டர் காரணம் இல்ல... நடந்தது என்ன?
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களின் பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும்...
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இன்ஸ்டாகிராமில் போனி கபூர் இணைய இது தான் காரணமா... மகனே வெளியிட்ட தகவல்
மும்பை : பிரபல தயாரிப்பாளரான போனி கபூர், பல ஹிட் படங்களை டைரக்ட் செய்துள்ளார். தற்போதும் பாலிவுட், கோலிவுட் என மொழிகளிலும் டாப் ஹீரோக்கள் நடிக்கும் படங்களை தயாரித்து வருகிறார் போனி கபூர்.

ட்விட்டரில் படு ஆக்டிவாக இருக்கும் போனி கபூர், புதிய படங்கள் பற்றிய அப்டேட்களை ட்விட்டரின் மூலம் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் இன்ஸ்டாகிராமிலும் இணைந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் வந்ததுமே தான் தனியாக இருக்கும் ஸ்டையிலான ஃபோட்டோக்கள் பலவற்றை பதிவிட்டுள்ளார்.
ப்ரோமோவிற்கு வெளியிடுவதை போல் போனி கபூர் பகிர்ந்துள்ள ஃபோட்டோக்கள் லைக்குகளை அள்ளி வருகின்றன. போனி கபூரின் இந்த போஸ்டிற்கு அவர் இன்ஸ்டாகிராமிற்கு வந்ததை வரவேற்று அவரது மகன் அர்ஜுன் கபூர் மற்றும் மகள் ஜான்வி கபூர் ஆகியோர் கமெண்ட் செய்துள்ளனர்.
அர்ஜுன் கபூர் தனது பதிவில், அப்பாவும் கடைசியாக இன்ஸ்டாகிராமிற்கு வந்து விட்டார். தனது பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என கண்காணிக்கவும், யாரும் அறிந்திராத தனது ஃபேஷனான மற்றொரு பக்கத்தை உலகிற்கு காட்டவும் என குறிப்பிட்டுள்ளார்.
போனி கபூரி - ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், அவரின் அப்பாவின் ஸ்டைலான ஃபோட்டோவை பகிர்ந்து, ஹாய் அப்பா என ஹார்ட் எமோஜிக்களுடன் பதிவிட்டுள்ளார்.
இதுவரை தயாரிப்பாளராக இருந்து வந்த போனி கபூர், தற்போது நடிகராகவும் அவதாரம் எடுக்க போகிறார். தற்போது தான் நடிக்கும் புதிய படத்தின் வேலைகளுக்காக டெல்லியில் இருந்து வருகிறார். ரன்பீர் கபூர், ஸ்ரத்தா கபூர் லீட் ரோலில் நடிக்கும் படத்தில் தான் போனி கபூரும் நடித்து வருகிறாராம்.
மகளுக்காக
போராடும்
தந்தை
வேடத்தில்
யோகிபாபு…
விரைவில்
ரிலீசாகும்
பொம்மை
நாயகி
தமிழில் அஜித் நடித்துள்ள வலிமை படத்தை தயாரித்து முடித்துள்ள போனி கபூர், அஜித்தின் அடுத்த படமான தல 61 படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்க உள்ளார். இந்த படம் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு விட்டதால், ஆரம்ப கட்ட பணிகள் விரைவில் துவக்கப்பட உள்ளனவாம். வலிமை ரிலீசிற்கு பிறகே தல 61 படத்தின் வேலைகளை துவக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.